Youtube Link
https://www.youtube.com/watch?v=CLgkJSmowkk
வேதபகுதி : ஏசாயா 62:3,4
ஏசாயா 64:8
ஏசாயா 62: 3,4 ல், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையுள்ள வார்த்தைகளை தேவன் கூறுகிறார்.
கிரீடம் - இது கையில் வைத்திருக்கும் பொருளில்லை ஆனால் தேவன் கையில் அலங்காரமான கிரீடமும் என்று ஏன் கூறுகிறார்?
யாத் 29:6 ல், கிரீடம் ஒருவர் தலையில் வைத்தால் அது ஒரு அதிகாரத்தை அவனுக்கு தருகிறது. ஒரு கல் மட்டும் பதிக்கப்பட்டிருக்கும். ராஜமுடி நிறைய விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். கிரீடம் கையில் இருக்கிறது என்றால் யாருக்கோ ஆயத்தமாய் இருக்கிறது என்று அர்த்தம்.
தலைப்பு : உருவாக்கப்படுதலும் , மறுரூபமாக்கப்படுதலும்
கிரீடம் செய்ய கடைப்பிடிக்க வேண்டியது:
1. வடிவம் எப்படி என சிந்திக்க வேண்டும்.
2. என்னென்ன பொருட்கள தேவை என தெரிவு செய்தல். (தங்கம், விலையுயர்ந்த கற்கள்)
3. என்ன வகை.(கோகினூர், நவீன முறை)
4. உருவாக்கப்படுவதற்கான வேலை.
5. உருவகம் படுத்துதல்.
6. கடைசியாக தரம் கண்டறிதல். இந்த நிலைகளை எல்லாம் முடித்தால் தான் கிரீடம். இப்போது நாம் கிரீடம் இல்லை . இந்த நிலைகளை எல்லாம், நாம் கடந்து வந்தால் தான் கிரீடமாக இருப்போம்.
தேவன் நம்மை உருவாக்கினார், நாம் எந்த வீட்டில் யாருக்கு பிறக்க வேண்டும் , என்ன படிக்க வேண்டும் என எல்லாவற்றையும் தேர்வு செய்து விட்டார். எந்த வகையில் நாம் இருக்க வேண்டும் என தேவன் குறித்து விட்டார். நம்முடைய வாழ்விலும் கடினமான நிலைக்குள் நாம் கொண்டு போகப்படுகிறோம்.
• தேவனிடத்தில் நூறு சதவீதம் நம் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
• நம்முடைய விசுவாசத்தை சற்று ஆழப்படுத்த வேண்டும்.
• தேவனோடு இருக்கும் உறவில் வளர வேண்டும்.
உ.தா: தாவீது, ஆபிரகாம்,மோசே. இவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் தேவன் நடத்துதலை தெரிந்து கொள்ளலாம்.
உருவாக்கப்படும் போது 3 காரியங்கள் நமக்குள் நிறைவேற வேண்டும்.
1. தேவ நோக்கம் நிறைவேற வேண்டும். உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் என்று சிந்தனையில் மாற்றம் வர வேண்டும்.
2. விசுவாசம் சற்று ஆழமாக பதிய வேண்டும்.
3. தேவனோடுள்ள உறவில் வளரவேண்டும்.
இந்த 3 நிலையும் சரியாக இருந்தால் தேவன் இலகுவாக உருவாக்கிவிடுவார். சுய நோக்கம் நிறைவேற வேண்டும் என விரும்புகிறவர்களை தேவனால் கிரீடமாக வனைந்து கொள்ள இயலாது. நம்முடைய அனுமதியில்லாமல் தேவன் நம் வாழ்வில் ஒன்றும் செய்வதில்லை. (இதோ வாசற்படியில் ………..போஜனம் பண்ணுவேன். வெளி 3:20). என சொல்கிறார்.
விசுவாசத்தை ஆழமாக்க வேண்டும் என்பதை மறந்து பெருமையை ஆழமாக்க விரும்புகிறோம். (ஆவிக்குரிய பெருமை, பொருளாதாரம், அந்தஸ்து) பிசாசோடு தொடர்பு கொள்கிறோம். தேவ நோக்கத்தை அறிந்து வாழ்ந்த 2 நபர்கள், தாவீது , யோசேப்பு. இவர்களுக்கு தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மனநிலை இருந்தது. 1 சாமுவேல் 16:13 ல், கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்திறங்கினார். விசுவாசம் தாவீதுக்குள் வளர ஆரம்பிக்கிறது. 1 சாமுவேல் 16:23 ல், தாவீதினால், சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான். நாம் முதலில் யார் கையில் இருக்கிறோம்?
நம் கையில் என்ன இருக்கிறது? 1 சாமுவேல் 17:29 ல், தாவீது நான் வந்ததற்கு முகாந்தரமில்லையா? என்றான். சங்கீதம் 18: 1-6,
2 சாமுவேல் 22: 1-7, சங்கீதம் 42, 43. தாவீது, தேவதிட்டத்திற்கு ஒப்பு கொடுத்தான், தேவன் மீதுள்ள உறவை ஆழப்படுத்தினான் , தேவனோடுள்ள உறவை திடப்படுத்தினான்.
அப்சலோம்(தாவீதின் மகன்) ராஜ சிங்காசனம் அவனுக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும் , அவனுடைய தவறான நோக்கத்தாலும் , அகித்தோப்பேலின் தவறான ஆலோசனையினாலும் தேவ திட்டத்தை இழந்து விட்டான்.
2 சாமுவேல் 18: 9, 17,18 ல், சுயத்தை சார்ந்து இறந்து போகிறான். சுயத்தை மட்டும் மையமாக கொண்டு வாழக்கூடாது. இந்த உருவாக்கப்படும் அனுபவத்தில் நம்மை நாம் அவருடைய கரத்தில் அர்ப்பணிக்க வேண்டும். தேவன் நம்மை அழகான கிரீடமாய் உருவாக்குவார். ஆமென்.