Youtube Link
https://www.youtube.com/watch?v=oKOVAytmY5I
வேதபகுதி: 1சாமுவேல்
3:1-10
தலைப்பு: தேவனோடிருக்கிற உறவு.
தேவனோடிருக்கிற உறவு என்பது, ஒவ்வொருவரும் தனிப்பட்ட உறவில் தேவனோடிருப்பது. நம்முடைய தேவன் பல விதங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார்.
ஆகாருக்கு
காண்கிற தேவனாய் வெளிப்பட்டார். ஆபிரகாமுக்கு சர்வவல்லமையுள்ள தேவனாய் வெளிப்பட்டார்(ஆதி17:1),
ஆதி22ல், ஆபிரகாமுக்கு ஆசீர்வதிக்கின்ற தேவனாக வெளிப்பட்டார்.
சாமுவேலுக்கு தேவன் வெளிப்பட்ட விதம்:
சாமுவேல் தேவனை அறிகிற அறிவில் வளராதவனாய்
இளைஞனாய் இருந்தான். தேவன் அவனைக் கூப்பிட்டு
அவனுக்கு ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சாதாரணமான மதம்சார்ந்த
வாழ்க்கை அல்ல தேவனோடு இருக்கும்
உறவில் நாம் வளர வேண்டும்.
சாமுவேல் வாழ்ந்த காலத்திலும்
தேவனுடைய வசனம் அபூர்வமாய்
இருந்தது.(விளக்கு அணையுமுன்னே
அவன் படுத்துக் கொண்டான்
- விபச்சாரம் செய்யும் காலத்தில்
தன் வாழ்க்கையை காத்துக் கொண்டு நடந்தான்.)
இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலை தான் அப்போதும்
இருந்தது. ஆனால் சாமுவேல் தேவனுடன் சரியான உறவில் இருந்ததினால் அவனுடைய வாழ்க்கை நன்றாய் இருந்தது.
நாமும் தேவனுடனான உறவில் நம்மை சீர்ப்படுத்த வேண்டும் அவருடனான உறவில் நாம் வளர வேண்டும்.
தேவனோடு உள்ள உறவில் வளருவதற்கு மிக முக்கியமானவைகள்:
அர்ப்பணிப்பு: கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கும் தன்மை நமக்குள் இருக்க வேண்டும். சாமுவேல்
-தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தான். (1சாமுவேல்3:1)
நாம் தேவனோடு இருக்கும்
உறவில் வளர வேண்டுமானால் நம்மை கர்த்தருக்கு அர்ப்பணித்து வாழ்வது அவசியம்.
கவனிக்க வேண்டும்: கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஜெபம் செய்யும் பழக்கம் இருக்கிறது.
ஆனால் அவர் சொல்வதை கேட்கும் பழக்கம் நமக்குள் இருக்கிறதா?
அவரை, அவருடைய வார்த்தையை
கவனிக்கும் பழக்கம் நமக்குள் இருக்கிறதா?
தேவன் நம்மோடு பேச விரும்புகிறார் என்ற எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும் பொழுது எந்த இடத்திலும்
எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மோடு பேசுவார்.
தேவனுடனான
உறவில் நாம் வளர கவனிக்கிறவர்களாய் (அவருடைய வார்த்தையை) இருக்க வேண்டும்.
கீழ்படிய வேண்டும்: 1சாமுவேல்3:10, சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன், என்ற கீழ்படிதல் சாமுவேலுக்குள் இருந்தது. தேவனுடனான உறவில் நாம் வளர வேண்டுமானால் கீழ்படிய வேண்டும். தேவன் சூழலை ஏற்படுத்தி
கொடுக்கும் வரைக்கும் அமைதலாய் இருக்க வேண்டும்,
கீழ்ப்படிய வேண்டும். அவரோடு இருக்கும் உறவு தான் நம்மை கீழ்ப்படிய வைக்கும்.
உண்மையாய் வாழ வேண்டும்: (1சாமுவேல்15,16,17)அதிகாரங்கள்.
சாமுவேல் -நியாயம் விசாரிக்கும் வேலையை சரியாய் செய்தான்.
யார் தேவனோடு நல் உறவில் இருக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய பொறுப்பை சரியாய் நிறைவேற்றுவார்கள். தேவனோடு இசைந்து வாழ்ந்தால்
நம் ஸ்தானத்திற்கு உண்டான பொறுப்பை நாம் சரியாய் நிறைவேற்றுவோம்.
தேவனுடனான
உறவு மிகமிக முக்கியமானது அந்த உறவில் நாம் வளர வேண்டும்.