×

Youtube Link

https://www.youtube.com/watch?v=0ZVtlycCpuY


வேதபகுதி: சங்கீதம் 25:12-22

       சங்கீதம் 25:12-14 (மைய வசனம்)

   தேவன் எப்பொழுதும் நம்மோடு பேசினாலும் அதில் 2 முக்கிய காரியங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1.            தேவன் தாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறார். எப்படி செயல்படுகிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

2.            அவரை மட்டும் அவர் வெளிப்படுத்தாமல் நாம் யார் என்பதையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

  இந்த 2 காரியங்களையும் நினைவில் கொண்டு சங்கீதம்25:12-14 இந்த வசனங்களை தியானிப்போம்.

தேவன் தன்னை இப்படியாக வெளிப்படுத்துகிறார்:

  1.வழியை போதிக்கிறவர்

  2.நம்மை ஆசீர்வதிக்கிறவர்

  3.அவர் இருதயத்தின் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

  4.உடன்படிக்கை பண்ணுகிறவர்களுக்கு அவைகளைப் பற்றிய காரியத்தை கூறுகிறவர்.

(சங்கீதம்25:12)கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன்:

  கர்த்தருக்கு பயப்படுதல் என்பது,

             அவருக்குக் கொடுக்க வேண்டிய கனத்தை கொடுப்பது.

             அவரை பிரம்மித்துப் பார்ப்பது. (அவர் செயல்படும் விதத்தை பிரம்மித்துப் பார்த்தல்.)

             அவருடைய கரத்தில் நம் வாழ்க்கையை முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்தல்.

இந்த 3 காரியங்களும் சேர்ந்து செயல்படுத்துவது தான் கர்த்தருக்கு பயப்படுதல். இப்படியாக கர்த்தருக்கு பயப்படும் மனிதனுக்கு தான் தேவன் அவர் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார்.

உதா:யாத்2:23,24,25(பெருமூச்சைக் கேட்டு,…………. தேவன் அவர்களை நினைத்தருளினார்.)

யாத்13:17,18.(சுற்றிப் போகப் பண்ணினார்.)

தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து, கானானுக்கு நேராய் நடத்தும் போது சுற்றி நடக்கப் பண்ணினார், காரணம் பெலிஸ்தரின் தேசவழியாய் போனால் யுத்தத்தை கண்டு சோர்ந்து போவார்கள் என்று.

     சுற்றி நடந்ததால், இஸ்ரவேல் ஜனங்கள், தேவனுடைய கிரியை கண்டார்கள். தேவனோடு உறவாடும் வாய்ப்பை பெற்றார்கள். தேவசத்தத்தை கேட்டார்கள்.(ஆசரிப்பு கூடாரமுறையை தேவன் இங்கிருந்து கற்றுக்கொடுக்கிறார்.)

நம் வாழ்விலும் கஷ்டத்தை மட்டுமே பார்க்காமல் அதன் நடுவில் தேவன் செய்த நன்மைகளை பார்க்கவேண்டும்.

(சங்கீதம்25:13) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களின் ஆத்துமா நன்மையில் தங்கும்:

   தேவன் தருகிற சமாதானத்தில் நாம் ஓய்ந்திருக்க வேண்டும். தேவன் தரும் மிகப்பெரிய ஆசீர்வாதம் தேவசமாதானம் ஆகும்.

(சங்கீதம்25:14)கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவர் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்:

   ஆதியாகமம் 12:1-3, ஆதியாகமம்17:1-8,(உடன்படிக்கையின் ஆசீர்வாதம்

   ஆபிரகாமோடு தேவன் என்னென்ன உடன்படிக்கை பண்ணினாரோ அதனோடு ஆசீர்வாதத்தையும் சேர்த்து கொடுத்தார். (பாதுகாப்பு, பெரிய ஜாதியாக்குவேன், பேரைப் பெருமைப்படுத்துவேன், பெருகப் பண்ணுவேன்.)

உபாகமம் 28(உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள்)

             தேவைகளை தருகிறார்

             பாதுகாப்பை தருகிறார்

             உயர்வை தருகிறார்

2 சாமுவேல்7:12-16, தாவீதுக்கும் தேவன் உடன்படிக்கையின்; ஆசீர்வாதத்தை கொடுத்தார். (தாவீதின் குமாரன்)

   இன்றைக்கும் நாம் இயேசுவோடு செய்த உடன்படிக்கையின் நிமித்தம் தேவன் நமக்கு இவ்விதமான ஆசீர்வாதங்களை தருகிறார்.

அவைகள்:

             பாவமன்னிப்பு

             பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுகிறார்.

             நித்திய வாழ்க்கை

             தேவ உறவு

             தேவ ராஜ்யத்தின் புத்திரர்கள்.

எனவே கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு தாம் தெரிந்து கொள்ளும் வழியை போதிக்கிறார். அவருடைய இரகசியங்களை தெரிவிக்கிறார். ஆமென்.


Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God