×

Youtube Link

https://www.youtube.com/watch?v=Df8Mg9yizvY


வேதபகுதி: சங்கீதம்25:1-6

தலைப்பு: நாம் எப்படி சிந்திக்க வேண்டும்? நம்முடைய சிந்தனையை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

     தியானிக்க: ரோமர்12:2. மத்தேயு 16:23. ரோமர்8:6

எரேமியா 17:10. நம்முடைய எண்ணங்கள் எப்படியோ நம்முடைய வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கும். ஆதாம்- ஏவாள்(சிந்தனைக்குள் பிசாசு தாக்கத்தை ஏற்படுத்தினான்.)

சிந்தனை என்பது, எண்ணங்களையும் கருத்துக்களையும் உருவாக்கும் ஆற்றல் உடையது. நம்முடைய சிந்தனையால் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும். பகுத்து ஆராய முடியும். தீர்வு எடுக்க முடியும் இப்படிப்பட்ட வல்லமைகளைத் தேவன் நமக்கு தந்திருக்கிறார்.

சிந்தனையின் வகைகள்:

             சில சிந்தனைகள் நமக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அமைகிறது. (தகவல்கள் பல நேரங்களில் நம்மை தவறாக நடத்துகிறது.)

             சில சிந்தனைகள் கற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.

             சில சிந்தனைகள் ஆராய்ந்து பார்த்து சிந்திப்பது. (நம்பகத்தன்மையானதா என ஆராய்ந்து பார்த்து சிந்திக்கும் முறை.)

             கட்டுப்பாட்டோடு சிந்திப்பது.( ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் சிந்திப்பது.)

இப்படி பல வகைப்பட்ட சிந்தனைகள் இருந்தாலும், நாம் சிந்திக்க வேண்டிய சிந்தனைகள் ஆவிக்குரிய சிந்தனையாக இருக்க வேண்டும்

ஆவிக்குரிய சிந்தனைகள்:

    தேவனோடு இணைக்கப்பட்ட ஒரு இணைப்பு. தேவனோடு இணைந்து வாழ்வதற்கான அர்த்தம் என்ன அதின் மதிப்பு என்ன என ஆராய்வது ஆவிக்குரிய சிந்தனை. உதா: யோபு- தேவன் ஒரு நோக்கத்தோடு இதை அனுமதித்தார் என்ற ஆவிக்குரிய சிந்தனையின் புரிதலோடு வாழ்ந்தான்.

     சில நேரங்களில் தேவன் நம் வாழ்க்கையில் தாமதங்களை ஏற்படுத்துகிறார். ஆனால் நாம் அவசரப்படுகிறோம். தாமதத்திற்கான காரணத்தை புரிந்துகொள்ளும் ஆவிக்குரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும். உலக பிரகாரமான சிந்தனைக்கும் ஆவிக்குரிய சிந்தனைக்கும் உள்ள வேறுப்பாட்டை நாம் கண்டு கொள்ள வேண்டும்.

உலக சிந்தனை:

             நம் கண் பார்ப்பது கேட்பது உணர்வது இதன் அடிப்படையில் உருவாகுவது உலக சிந்தனை.

             இது பயத்தை ஏற்படுத்தும் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணங்கள் சமாதானம் இல்லாமல் இருக்கும்.

ஆவிக்குரிய சிந்தனை:

             தேவனுடைய வார்த்தையை நம் இருதயத்தில் வைத்து சிந்திப்பது.

             சூழ்நிலை போராட்டமாய் இருந்தாலும் குழப்பம் இல்லாமல் சமாதானமாய் இருப்பது. (எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் ….. காத்துக்கொள்ளும்.)

  (பேதுரு: ஜலத்தின் மேல் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு நடந்தான்.)

  தேவன் நம்மை வீழ்ச்சியடைந்த உலகத்திலிருந்து வேறு பிரித்திருக்கிறார் எனவே நாம் உலக பிரகாரமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

 நம்முடைய சிந்தனையின் எண்ணங்களை நாம் எங்கிருந்து பெறுகிறோம் என்பதை ஆராய வேண்டும். அது உலகத்திலிருந்து வந்ததா? தேவனிடத்திலிருந்து வந்ததா? என ஆராய வேண்டும்.

உலக சிந்தனை- பயத்தை ஏற்படுத்தும். உறவை பிரித்து விடுகிற எண்ணங்களைக் கொண்டுவரும்.

ஆவிக்குரிய சிந்தனைதெளிவான மனநிலையை  ஏற்படுத்தும். ஜீவனையும் சமாதானத்தையும் தரும். தேவனோடுள்ள உறவைக் கட்டியெழுப்பும்.

  நம்முடைய சிந்தனைக்கு நாம் தான் பொறுப்பு நம்முடைய சிந்தனையின் மீது தேவன் நமக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யும் அதிகாரத்தை தேவன் நமக்கு கொடுத்து இருக்கிறார்.

  எனவே நம்முடைய சிந்தனைக்குள் நம் அனுமதி இல்லாமல் எதுவும் நுழைய முடியாது. எதை சிந்திக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

நடைமுறை வாழ்வில் இதை எப்படி செயல்படுத்துவது.

    யாக்கோபு3:15-17,( உலகத்திலிருந்து வருகிற ஞானம் எப்படியிருக்கிறது, பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் எப்படியிருக்கிறது என்று கூறுகிறது.)

             ஒவ்வொரு நாளும் தேவன் பாராட்டின நன்மைகளை சிந்தியுங்கள்மற்றவர்களிடம் விவரித்து பேசுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.

             அனுதினமும் நம்மில் எண்ணங்கள் வரும்போது அது உலகத்திலிருந்து வந்ததா? தேவனிடத்திலிருந்து வந்ததா? என்பதை வகைப்படுத்த பழக வேண்டும்.

   நம்மை பெலவீனப்படுத்துகிற எண்ணங்களை தூக்கிப் போட்டுவிட்டு நம்மைப் பெலப்படுத்துகிற காரியங்களை சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நடத்தி வந்த பாதைகளைக் குறித்து சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.

 இவைகளை தினந்தோறும் நம் வாழ்க்கையில் செயல்படுத்தும் போது, பரிசுத்த ஆவியானவர் சிந்தனையில் மாற்றங்களை கொண்டுவருவார்.

ஆமென்.

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God