Youtube Link
https://www.youtube.com/watch?v=WG7Wsa3pxnc
வேதபகுதி: 1சாமுவேல் 26:25, அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான், அப்படியே தாவீது தன் வழியே போனான், சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.
1சாமுவேல் புத்தகம் புதிய ஆரம்பம்,புதிய அறிமுகம், புதிய ஆசீர்வாதம் என்ற 3 முக்கிய கருப்பொருளை உள்ளடக்கியது. 1சாமுவேல் புத்தகத்தில் 4 முக்கியமான நபர்கள் உள்ளனர்.
சவுல், தாவீது இருவரையும் இணைத்து சில காரியங்களை தியானிக்க போகிறோம்.
புதிய ஆரம்பம்- சந்தோஷத்தை ஏற்படுத்தும் சில நேரங்களில் மன அழுத்தத்தையும் சில புதிய ஆரம்பங்கள் ஏற்படுத்தும்.
புதிய ஆரம்பம் மனதிற்கு இதமாய் இருக்கும். தாவீதுக்கும் சவுலுக்கும் தேவன் புதிய ஆரம்பத்தை தருகிறார்.
சவுல் - பென்யமீன் கோத்திரத்தான் (1சாமுவேல்9:21) 12 கோத்திரத்திலும் மிக சிறியது. கழுதையை தேடிக்கொண்டு போனவனை (சவுலை) ராஜாவாய் அபிஷேகம் பண்ணினார். தேவன் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார். தேவன் சவுலை அழைத்தார்(30 வயதில்). தேவன் நம்மையும் அழைத்திருக்கிறார். அந்த அழைப்பு தான் நம்மை தேவ திட்டத்திற்கு நேராக நடத்தும்.
தேவன் சவுலை அபிஷேகித்தார். அந்த அபிஷேகம் சவுலை பெலப்படுத்தியது. தேவனுடைய அபிஷேகம் நம்மை பெலப்படுத்தி நடத்துகிறது.
தேவன் ஏற்படுத்திய கனத்தை நாம் பெற்றுக்கொள்வதற்கு நம்மை உயர்த்துகிறார். நம்மையும் தேவன் நமக்குரிய கனத்திற்கு நேராய் நடத்துவார்.
தாவீது – தேவன் அவனை அழைத்த போது அவன் வயது 15-17 ஆக இருந்தது(1சாமுவேல்16:12). ஆடுகளுக்கு பின்னால் அலைந்தவனுக்கு தேவன் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தினார். தேவன் சிங்கத்தின் மூலமாய் புதிய அறிமுகத்தை தாவீதுக்கு கொடுத்தார். தாவீது பெற்ற அபிஷேகம் அவனை பெலப்படுத்தியது. சிங்கத்தை மேற்கொண்டான். இருவரும் தேவனிடத்தில் அழைப்பை பெற்றாலும் சவுல் வீழ்ந்ததற்கான மிகப்பெரிய காரணம், மக்களுக்கு முன்பாக தன் மரியாதையை காத்துக்கொள்ள விரும்பினான். தேவன் தந்த கனத்தை யாராலும் பறிக்க முடியாது. சவுல் இதை மறந்து செயல்பட்டான். ஆனால் தாவீது தான் பாவம் செய்ததை அனைவரும் அறிந்து விழிப்புணர்வோடு இருக்க அதை பாடலாய் பாடினான்.
புதிய அறிமுகம் : 1சாமுவேல் 11:11 – சவுல் யுத்தத்தின் தலைவனாய் அறிமுகப்படுத்தப்பட்டான். தேவன் தந்த கனத்தை மறந்து தன்னுடைய கனம் தன்னுடைய மரியாதை என்று எண்ணினான். கலக்கமும் பயமும் நிறைந்த சவுலுக்கு தாவீதின் இசை இன்பமாய் இருந்தது. தாவீதுக்கு கோலியாத்தை அறிமுகப்படுத்தினார். தாவீது கோலியாத்தின் முன் பேசிய வார்த்தைகள் தேவனை கனப்படுத்தியது. தாவீது தேவனை கனம் பண்ணினான். சவுலை எந்த சூழ்நிலையிலும் தவறாய் பேசவில்லை சவுலுக்கு விரோதமாய் அவன் செயல்படவில்லை. தாவீது பொறுமையாய் காத்திருந்தான் தேவ திட்டம் நிறைவேற.
சவுல் அவசரமாய் செயல்பட்டு துணிந்து பலி செலுத்தினான். தேவன் தாமதத்தை ஏற்படுத்துவதற்கு காரணம் உண்டு என்பதை சிந்திக்க தவறினான். தேவன் ஏற்படுத்தும் தாமதங்கள் நம்மை ஆயத்தப்படுத்துவதற்கு. சவுல் தேவ வார்த்தைக்கு கீழ்படியாமல் செயல்பட்டான்.
சவுலின் தவறுகள்: மக்கள் கண்களுக்கு இதமாய் நடக்க விரும்பியது. பதவியை விட்டுவிடக்கூடாது என்று சிங்காசனத்தின் மீதே முழு கவனத்தையும் செலுத்தினான். சிதைந்துபோன கேவலமான அவனுடைய எண்ணங்கள். 1சாமுவேல்31:4, அவன் பட்டயத்தை நட்டு தானே அதில் விழுந்தான்.
தாவீது மக்களை விட கர்த்தருக்கு பிரியமாய் நடக்க வேண்டும் என விரும்பினான். பதவி வந்தாலும் தேவனுடைய சமூகத்தையே தேவனுடனான உறவையே விரும்பினான். நம் வாழ்க்கையில் தேவன் நம்மை அறிமுகப்படுத்த விரும்புகிறார். நாமும் தேவனுடனான உறவை காத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமாய் இருக்க வேண்டும். தேவனை சார்ந்து வாழ்பவர்களாய் நாமும் வாழ வேண்டும்.
ஆமென்.