Youtube Link
https://www.youtube.com/watch?v=5g3VjETQtn4
வேதபகுதி : ரூத் 2 : 1 - 12 (10-12)
“உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக”.
இந்த வருடத்தில் செய்கைக்குத் தக்கதாக பலனைக் கர்த்தர் கட்டளையிடுவார். நிறைவான பலனையும் தருவார் என வாக்குப்பண்ணியிருக்கிறார்.
• இந்த வருடத்தில் இந்தநாள் வரைக்கும் நம்மை ஜீவனோடு வைத்திருப்பது எதனால்?
• எதனால் கர்த்தருடைய கண்களில் கிருபை எனக்கு கிடைத்தது? என்பதை சிந்திக்க வேண்டும்.
ஆதி 4:7; ரோமர் 2:7, அவனவனுடைய கிரியைக்குத் தக்கதாய் கர்த்தர் பலன் அளிக்கிறார். இரட்சிப்பு இலவசம். தொடர்ந்து நம்மை நன்மையின் பாதையில் நடத்திட தேவன் எதிர்பார்க்கும் இரண்டு காரியங்கள்.
ஏசாயா 26:3- கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்கிற மனம், கர்த்தரை மட்டுமே நம்புகிற நம்பிக்கை இந்த இரண்டுமே இருந்தால் பூரணசமாதானம் உண்டாகும். அப் 27:21-25, எரே17: 5-8. பவுல் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்ததினால் பெரும் புயலில் சிக்கிக் கொண்ட போதிலும் பூரண சமாதானத்துடன் இருந்ததால்தான், பிறரையும் தைரியப்படுத்த முடிந்தது.
நாம் விரும்புகிற ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, கர்த்தர் மேல் வைக்கிற நம்பிக்கை உண்மையான நம்பிக்கை அல்ல. என் மீட்பர் உயிரோடிருக்கிறார், கொடுத்தாலும் ஸ்தோத்திரம், எடுத்தாலும் ஸ்தோத்திரம் என்னும் நம்பிக்கை கர்த்தர் மேல் வேண்டும்.
2 நாளா 32: 6-8, எசேக்கியா ராஜாவும், ஜனங்களும் தேவன் மேல் நம்பிக்கை வைத்தனர். ஏசாயா 66:22 ல், என் வசனத்திற்கு செவிக்கொடுத்து கிரியை செய்கிற மனிதர்களை நோக்கிப் பார்ப்பேன் எனக் கர்த்தர் சொல்கிறார். 2 தீமோத்தேயு 3:16,17ல், வேதவசனம் எது சத்தியம், எது உண்மையென்று சொல்லி கொடுக்கும் தேவனுடைய வசனம் நம்மிடத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டும். அதுமட்டுமல்லாது குறையை நீக்கவும் தேவ வழியில் நடக்கவும் நமக்கு பயிற்சி கொடுக்கிறது. ஆமென்.
Youtube: