Youtube Link
https://www.youtube.com/watch?v=LSndzJRniiI
வேதபகுதி: சங்கீதம் 25:1-10
தலைப்பு: யாருக்கெல்லாம் தேவன் தம்முடைய வழியைத் தெரிவிக்கிறார்?
சாந்தகுணமுள்ளவர்களுக்கு கர்த்தர் தம் வழியைத் தெரிவிக்கிறார். சாந்தகுணமுள்ளவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சியையும் கைக்கொள்ளுவார்கள்.
சாந்தகுணம் என்றால் என்ன?
சங்கீதம் 25:9,10. இந்த வசனத்தை ஆங்கில வேதாகமத்தில் வாசிக்கும் போது சாந்தம் என்ற இடத்தில் தாழ்மை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தாழ்மை:
தேவனுக்கு முன்பாகவும் மற்ற ஜனத்திற்கு முன்பாகவும் நாம் எப்படி இருக்கிறோம் என்று நம்மைக் குறித்து நாம் சரியாகப் பார்ப்பது. நம்மைக் குறித்து நாம் பெருமையாய் நினைப்பதும் தவறு, தாழ்வு மனப்பான்மையாய் நினைப்பதும் தவறு ஆகும்.
தேவன் நம்மை எப்படி பார்க்கிறார் என்பதை பார்ப்பதே தாழ்மை. தேவனுடைய உதவியில்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைப்பது தான் தாழ்மை. யாக்கோபு 4:6 ன் படி, நாம் நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கரத்தில் அர்ப்பணித்து அவரை சார்ந்து கொள்வது தான் தாழ்மை. இப்படி வாழ்பவர்களுக்கு தான் தேவன் கிருபையளிக்கிறார்.
சாந்தம் என்றால் என்ன?
சாந்தம் என்பது ஒரு கோழைத்தனமல்ல, பெலவீனமல்ல எனக்கு எல்லா பெலனும் உண்டு ஆனால் ஒரு ஆளுகைக்குள் என்னை விட்டுக்கொடுத்து வாழ்வேன் என்று வாழ்வதாகும்.
தாழ்மை என்பது:
• முற்றிலும் தேவனை சார்ந்துக் கொள்வது.
• நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து தேவனை சார்ந்து இருப்பது.
• தேவன் தந்த நன்மைகளுக்காக தேவனுக்கு மகிமை செலுத்துவது.
• தேவன் எனக்கு தேவை என நினைப்பது.
• தாழ்மை என்பது நம் சிந்தையில் இருப்பது.
சாந்தம் என்பது:
• நமக்கு வல்லமைகள் இருந்தாலும், திறமைகள் இருந்தாலும் நாம் தேவனுடைய கரத்தில் பொறுமையாக அடங்கியிருப்பது
• மற்றவர்களோடு இருக்கும் உறவில் பொறுமையாய் இருப்பது.
• என்னோடு இருக்கும் மக்களுக்கு நான் எப்படி பதில் சொல்லுகிறேன் என்பதை அடிப்படையாகக் கொண்டது.
• மற்றவர்களோடு பொறுமையாய் செயல்பட வேண்டும் என்று நினைப்பது.
• சாந்தம் என்பது நமக்கும் பிறருக்கும் இருக்கும் உறவை சார்ந்தது.
• சாந்தம் என்பது வாழ்க்கையில் காணப்படும் ஒன்று.
இந்த இரண்டும் (தாழ்மை,சாந்தம்) சேர்த்து நாம் கைக்கொள்ள வேண்டும்.
சாந்தமும் தாழ்மையும்; உள்ளவர்களால் தான் தேவனுடைய உடன்படிக்கையை கையாள முடியும். இதைத்தான் இயேசு மத்11:29ல், நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் என்றார்.
மனத்தாழ்மையும் சாந்தகுணமும் உள்ளவர்களை தேவன் சரியான பாதையில் நடத்துவார். வழிமாறிப் போன தாவீதை சரியான பாதையில் நடத்தினார்.
தேவன் நம்மை நியாயத்தின் பாதையில் நடத்துவார். தேவனே என்னை நீதியின் பாதையில் நடத்தும் என்று ஜெபிக்க வேண்டும். நாம் எப்படி சிந்திக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் நமக்கு கற்றுத்தருகிறார். (ரோமர் 12:2).
ஜெபம்:
• சாந்தமும் மனத்தாழ்மை உள்ள நபராய் நான் வாழ்வதற்கு எனக்குக் கற்றுத் தாரும் என ஜெபிக்க வேண்டும்.
• என்னை சரியான பாதையில் (நியாயத்தில்) நடத்தும் என ஜெபிக்க வேண்டும்.
• நான் எப்படி சிந்திக்க வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்று தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். ஆமென்