Youtube Link
https://www.youtube.com/watch?v=7ee35WIDDQQ
வேதபகுதி : யோசுவா 3:4 - இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை.
ரோமர் 8:14 – மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ , அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். தேவஆவியினால் நடத்தப்படுகிற அனுபவத்திற்குள் வந்து விட வேண்டும்.
இதற்கு முன்னே நடந்த பாதை வேறு , இனிமேல் நடக்கப்போகிற பாதை வேறு. இதற்கு தேவ ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஏசாயா 50:10ல் - இருட்டில் நடக்கிறவர் கர்த்தரின் நாமத்தை நம்பி தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்.
ஏசாயா 42:16 ல்- தேவநடத்துதலை அறியாத குருடர்களை நடத்தி அவர்களுக்கு முன் இருளை வெளிச்சமாக்குவார். யோசுவா 5 : 15 ல் மோசேக்கு சொன்னது போல யோசுவாவுக்கும் பாதரட்சையை கழற்றி போடு என்கிறார். பாதரட்சை என்பது விருப்பம். தேவன் நம் விருப்பத்தை அல்ல புதிய காரியங்களை செய்கிறவர். நாம் செய்யும் தவறு ஆவியானவர் நம்மை எப்படி நடத்துகிறார் என்பதை சிந்திக்காமல் நம் விருப்பத்தின்படி தேவன் நம்மை நடத்த வேண்டும் என ஜெபிக்கிறோம். நியாயாதிபதிகள் 13:25ல்
தேவன் உள்ளுணர்வின் மூலம் பேசுகிறார். இதை கேட்பது தான் தேவபுத்திரர் ஆகும் அனுபவம். நியாயா 14:1 , நம் கண்ணின் காட்சியைக் கண்டு அதன்படி வாழ்ந்தால் அது வீழ்ச்சியைக் கொண்டு வரும். நாம் காண்கிற காட்சியையும் கேட்கிற சத்தமும் நாம் தவறாக முடிவு எடுக்கத் தூண்டும் ஆவியானவர் நம்மை முதலில் வனாந்திரத்திற்கு நடத்தி அதை செழிப்பாக்குவார்.
1. லூக்கா 4:1ல், நம்முடைய தேவையை முன்னிலைப்படுத்தி ,
நம்மை அவசரப்படுத்தி நம்மை சிந்திக்கவிடாமல் தவறான முடிவை எடுக்க வைப்பது பிசாசின் தந்திரம்.
2.நிறைய நேரங்களில் பிறர் வெட்கப்பட்டு போகத்தக்கதாக என்னை ஆசிர்வதியும் என ஜெபிக்கிறோம். இது தவறு நீர் என்னை எந்த பாதையில் நடத்த சித்தமோ, நடத்தும் என ஜெபிக்க வேண்டும்.
3. தேவனுக்குப் பதிலாக நம்முடைய நம்பிக்கையை வேறொன்றின் மீது வைக்கத்தூண்டுவான் பிசாசு. நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மாற வேண்டும் என ஜெபிக்கிறோம். ஆனால் அந்த சூழ்நிலையிலும் அற்புதம் செய்கிறவர் இயேசு. நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையைத் தேவன் மாற்றுவதில்லை. தேவன் நம்மை மாற்றுகிறார். ஆழமான சமாதானத்தைத் தருகிறார். இவ்வாறு தேவன் நம்மை அறியாதபாதையில் நடத்துகிறார்.