Youtube Link
https://www.youtube.com/watch?v=88lG2hg482Q
வேதபகுதி : 1 கொரிந்தியர்1:18-25
1கொரிந்தியர்1:18, சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
பவுல் கொரிந்து பட்டணத்தில் திருச்சபையை நிறுவினார். அந்த சபையில் வாக்குவாதங்கள், பிரிவினைகள், பாவங்கள் நிறைந்து காணப்பட்டது.
1கொரிந்தியர்1:9,தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
6 விதமான போதனைகளை சிலுவை நமக்கு போதிக்கிறது.
• பாவத்திற்கான பரிகாரம்
• கிறிஸ்துவின் அன்பு, தியாகம்.
• இரட்சிப்பும், புதிய வாழ்க்கையும்.
• பாவத்தின் மீதும், மரணத்தின் மீதும் ஜெயத்தை தருகிறார்.
• சிலுவையில் தேவ வல்லமையும்,தேவ ஞானமும் வெளிப்படுகிறது.
• நமக்கொரு அழைப்பைக் கொடுக்கிறது. (இயேசுவை பின்பற்றுவதற்கு)
1கொரிந்தியர்1:19,20,21, 22.யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
• நாம் இயேசுவை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்திருக்கிறோமா?
• ஆண்டவர் ஏன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அற்புதம் செய்தார்?
அவர்களை நேசித்ததால், அவர்களுக்கு அற்புதம் செய்தார்.
• இன்று இயேசு என் மீது அன்பு செலுத்துகிறரா?
ஓவ்வொரு நாளும் கவனித்து பார்க்க வேண்டும்.
நமக்கு இன்ன தேவை என்பதை தேவன் அறிந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாய் தேவன் நம்மோடு இருக்கிறார். தேவன் சிலுவையில் மரித்த செய்தி தேவன் உங்களுக்குள்ளே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார். தேவன் நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். இயேசு என் மீது அன்புடன் இருக்கிறார் என்பதை காண்கிற கண்கள், உணர்கிற இருதயம் நமக்கு வேண்டும்.
கிரேக்கர்கள் எப்போதும் ஞானத்தின்படி யோசிப்பவர்கள். பொய் சொல்லாமல் பரிசுத்தமாய் வாழ்வது எப்படி சாத்தியம் என்று நினைப்பவர்கள். நம்மால் செய்ய முடியாததை தேவன் ஒருபோதும் சொல்லுவதில்லை.
• சவுலின் கண்களுக்கு தாவீதை போலிருப்பவர்கள் பைத்தியமாக தோன்றும்.
தாவீதுக்கு சவுலை கொலை செய்ய வாய்ப்புகள் கிடைத்தும். கொலை செய்ய வில்லை. இது உலகத்தின் பார்வையில் பைத்தியமாக தோன்றும்.
• லோத்துவின் கண்களுக்கு ஆபிரகாமைப் போலிருப்பவர்கள் பைத்தியம் தான்.
• பெலிஸ்தரின் கண்களுக்கு விட்டுக்கொடுக்கும் ஈசாக்கு போலிருப்பவர்கள் பைத்தியமாக தான் தெரியும். கர்த்தர் உன்னோடே இருக்கிறார். விட்டுக்கொடுக்கும் சுபாவம் உள்ளவர்களாக நடந்து கொள்ளும்போது மற்றவர்கள் தேவன் உன்னோடு இருக்கிறார் என்று சொல்லுவார்கள். 1கொரிந்தியர்1:24, நம்முடைய பெலன் இயேசு. அவரோடு பழகும் போது தேவன் தருகிற பெலனும் ஞானமும் அளவிடமுடியாது. நம்மை புத்திமானாக மாற்றுவார். ஆமென்.