Youtube Link
https://www.youtube.com/watch?v=ekIlMROxlBc
வேதபகுதி : எபிரெயர் 11:8-12
ரோமர் 4:18-21
ஆபிரகாம் விசுவாசத்தோடு எப்படி செயல்பட்டான்?
விசுவாசம் என்பது நம் மனதில் மட்டும் இருக்கிற நம்பிக்கைமட்டுமல்ல, எப்பொழுது பூரணமடையும் என்றால் இருதயத்தில் விசுவாசிக்கும் காரியங்களை, எப்பொழுது அந்த நம்பிக்கையோடு நடைமுறைப்படுத்துகிறோமோ அப்போது தான் அந்த விசுவாசம் முழுமையாக பூரணமடையும்.
1. ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான்.
2. அவன் போகும் இடம் இன்னதென்று அறியாவிட்டாலும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்தான்.
3. அவன் புறப்பட்டுப் போனான்.
4. நம்பிக்கையோடு கூடாரங்களில் குடியிருந்தான்.
5. தேவன் தரப்போகிற அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்காகக் காத்திருந்தான்.
6. சாராளின் விசுவாசம் (நம்பிக்கை): வாக்குத்தத்தம் தந்தவர் உண்மையுள்ளவர். வாக்குத்தத்தத்தின் மீதும் , அதை தந்தவர் மீதும் அளவில்லாத நம்பிக்கையோடு இருந்ததை பார்க்கலாம்.
எபிரெயர்11:10 ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
தேவன் வாக்குத்தத்தம் தருகிறார், ஆனால் எதுவும் நடக்காத சூழ்நிலையில் காத்திருப்பது ரொம்ப கஷ்டம். நாம் காத்திருக்கும் போது, தேவன் கிரியை செய்துக் கொண்டிருப்பது நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் தேவன் எதையும் அவசரமாக செய்கிறவர் அல்ல. அவர் தாம் குறித்திருக்கிற நேரத்தில் முழுபெலத்தோடு செய்கிறவர் நம் தேவன்.
ஆபிரகாம் : தேவன் ஆபிரகாமை அழைத்து வாக்குதத்தம் கொடுத்தார்.
எபிரெயர் 11:9ல், விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போலச் சஞ்சரித்து ………… கூடாரங்களில் குடியிருந்தான்.
தேவன் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை தருவேன் என்று வாக்குக்கொடுத்தார். ஆனாலும் உடனே நிறைவேறவில்லை. ஆபிரகாம் முதலில் வாங்கிய இடம் மக்பேலா குகை, அங்கே தன் மனைவியை அடக்கம் பண்ணினான். இந்த இடத்தை தருவேன் என்பதற்கு இது முதல் அடையாளம். காலங்கள் ஆனாலும் பொறுமையோடு காத்திருந்தான். நாம் காத்திருக்கும்போது தேவன் கிரியைசெய்து கொண்டிருக்கிறார். வாக்குத்தத்தம் கொடுத்தவர் யாரென்ற புரிதல் இருக்க வேண்டும். தேவன் தரும் வாக்குத்தத்தத்தில் நிகழ்கால ஆசீர்வாதமும், எதிர்கால ஆசீர்வாதமும் இருக்கும்.
தேவனுடைய வார்த்தைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். மாறாது, எந்ந காலகட்டத்திற்கும் பொருந்தும்.
எ.கா: ஆதாம் : ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை கொடுத்து அவன் விழிக்கும் போது ஏவாளை அவனுக்கு ஏற்ற துணையாய்க் கொடுத்தார்.
நம்முடைய தேவன் அதினதின் காலத்தில் சகலத்தையும் நேர்த்தியாக செய்து முடிக்கிறவர்.
எ.கா: சாராள் : எபிரெயர்11:11ல், விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். சாராளுக்குள் இருந்த விசுவாசம் அவளை பெலப்படசெய்தது.
எ.கா: யோசேப்பு : யோசேப்புக்கு தேவன் கொடுத்த சொப்பனம் நிறைவேற 21 ஆண்டுகள் ஆனது.
நம்முடைய இருதயத்தை பெலனடைய செய்வது தேவனாகிய கர்த்தருடைய வார்த்தை. நம்மை தைரியமாக செயல்பட வைப்பது தேவனுடைய வார்த்தை, தேவனுடைய வார்த்தையை நம்ப வேண்டும்.
தேவன் ஒரு வார்த்தை சொன்னால் அதில் நோக்கம் இருக்கும். நோக்கத்தை நிறைவேற்றாமல் அந்த வார்த்தை முடிவுக்கு வருவதில்லை. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அந்த வார்த்தை யோசேப்பை புடமிட்டு கொண்டிருந்தது.
தேவனுடைய வார்த்தையில் வல்லமை இருக்கிறது. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று தினந்தோறும் அறிக்கையிடும்போது, அந்த வார்த்தை நம்மைப் பெலப்படுத்தும். வேத வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு. தினமும் அறிக்கை செய்து ஜெபிக்கும் போது அது நம் வாழ்வில் நடைபெறும் ஆமென்.