Youtube Link
https://www.youtube.com/watch?v=12ZU_zVDmp0
வேதபகுதி: ஏசாயா30:15-18
தலைப்பு: கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசத்தைப் பயன்படுத்தி எப்படி சவால்களை மேற்கொள்ள வேண்டும்.
ஏசாயா30ம் அதி. (ஆகாஸ் ராஜா(எசேக்கியாவின் தகப்பன்.) இஸ்ரவேலும் ,சீரியாவும் அசீரியாவை எதிர்க்கக் கூட்டணிப்படை அமைத்த போது ஆகாஸ் அவர்களோடு சேரவில்லை. எனவே இஸ்ரவேலும், சீரியாவும் ஆகாசைப் பகைத்தன. ஆகாஸ் தேவனிடம் உதவி நாடாது அசீரியாவிடம் உதவி நாடினார். அசீரியாவும் உதவியது. அசீரியாவின் கவர்ச்சி ஆகாசை விக்கிரகப் பீடம் ஏற்படுத்தத் தூண்டியது.
இவர் கர்த்தரை சார்ந்து கொள்ளாமல் மனிதர்களை நம்பினார். இதனால் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசி மூலமாய் வந்தது.
• நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள், (ஏசாயா30:15)
• அமரிக்கையும், நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும். (ஏசாயா30:15)
மனந்திரும்புதல் என்பது, நம் மனம் தேவன் பக்கமாய் முற்றிலும் திரும்புதல்.
மோசே செங்கடலை கடக்கும் முன் கொஞ்சமும் பதற்றம் அடையவில்லை. கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டு தைரியமாய் செயல்பட்டான். நம்முடைய கண்கள் எப்போதும் தேவனை நோக்கிப்பார்க்க தேவன் விரும்புகிறார். சங்கீதம்121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
அமர்ந்திருத்தல் என்பது, ஆண்டவரை நோக்கி பார்க்கும் போது, தேவன் தருகிற இளைப்பாறுதல். நம் கண்கள் தேவன்மீது பதிக்கப்படுமானால், எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம்மை நிரப்பும்.
அமரிக்கையும் நம்பிக்கையும்: தேவன் தருகிற சமாதானத்தினால் நமக்குள் அமைதியும் நம்பிக்கையும் உண்டாகும் போது தேவ பெலத்தால் நிரப்பப்படுவோம்.
உ.ம்: இயேசுவோ பேசாமலிருந்தார்.(சிலுவையில் அறையும் முன்பு ஏரோது, பிலாத்து கேள்வி கேட்கும் போது)
அமைதியாக இருக்க வேண்டுமானால் தேவனுடைய வார்த்தையின் மீது நம்பிக்கை வேண்டும்.ரோமர்8:28 அன்றியும் ……. அறிந்திருக்கிறோம்.
இந்தமாதம் முழுவதும் நாம்செய்ய வேண்டியவை:
எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள்.
தினமும் 20 நிமிடம் தேவசமூகத்தில் அமைதியாக இருந்து தேவபிரசன்னத்தை அனுபவிக்க வேண்டும்.
உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.(மத்தேயு 28:20) இந்த வசனத்தை அறிக்கையிடுங்கள்.
நீர் என்னோடு இருப்பதற்காய் ஸ்தோத்திரம்.ஆமென்
தேவனை சார்ந்திருக்கும் போது நமக்காக இரங்கும் படி கர்த்தர் காத்திருப்பார். உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்.(ஏசாயா30:18) ஆமென்.