×
ஆவிக்குரிய வாழ்க்கையில் சுயபிரதிபலிப்பினுடைய அவசியம் அல்லது முக்கியத்துவம். | Avikuriya Valkaiyil Suyaprathipalipinudaya Avasiyam | 16 March 2025 | Rev. B. Samuel | Praise AG Church | Kolathur

Youtube Link

https://www.youtube.com/watch?v=cfQM5TGGKmI


வேதபகுதி: ஏசாயா30:15-18

தலைப்பு: ஆவிக்குரிய வாழ்க்கையில் சுயபிரதிபலிப்பினுடைய அவசியம் அல்லது முக்கியத்துவம்.

       அன்றாட வாழ்வில் நாம் கற்றுகொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம்………

         தேவசமுகத்தில் அமர்ந்திருத்தல் என்பது அல்லது கர்த்தருக்கு காத்திருத்தல்.

      சங்கீதம்46:10, நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.

      ஏசாயா40:31,கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்.

கர்த்தருக்கு காத்திருத்தல் என்பது, தேவனுடைய பிரசன்னத்தை அனுபவித்தல், தேவன் நம்மோடு பேசும்படி காத்திருத்தல். தேவசமுகத்தில் நம் இருதயத்தை சோதித்து அறிதல்.

சங்கீதம்139:1,2,23,24. தாவீது, தேவனே என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து  என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் என்று சொல்கிறார். 2கொரிந்தியர்13:5ல் பவுல், நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை, ……. இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா?

சுயபிரதிபலிப்பு என்பது நம்மைநாமே சோதித்து அறிகிற அறிவு.

சோதித்து அறிதல் என்பது நம்மைநாமே சிந்தித்தல்.

    1. நம்முடைய சிந்தனைகளை சோதித்து பார்க்க வேண்டும்.

    2. உணர்வுகளை சோதித்து பார்த்தல்(கோபம்,அன்பு.),

    3. நம்முடைய செயல்பாடு(நடத்தை) ஏன் இப்படியிருக்கிறது?

 ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசம் அவசியம். விசுவாசத்தில் வளர்வதற்கு உங்களை நீங்கள் சோதித்து பாருங்கள். நியாயாதிபதிகள்16:20ல், சிம்சோன் கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாதிருந்தான். இயேசு கிறிஸ்து நமக்குள் இருக்கிறாரா என்பதை அனுதினமும் பரிசோதித்து பார்க்க வேண்டும்.

எதையெல்லாம் சோதித்து பார்க்கவேண்டும்?

சோதித்து பார்க்க வேண்டிய 7 காரியங்கள்:

1.சிந்தனை

2.உணர்வுகள்

3.ஆசைகள்

4.செயல்கள்

5.நடத்தைகள்

6.மனப்பான்மை(நோக்கம்)

7.எது நம்மை உற்சாகப்படுத்துகிறது.

சிந்தனை: (எண்ணங்கள்)

                மத்தேயு16:13-18,21-23, பேதுரு: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்கிறான்(தேவனுக்கேற்ற சிந்தனை). இதே பேதுரு கிறிஸ்து தனக்கு சம்பவிக்கப் போகிறவைகளை  வெளிப்படுத்தும் போது, இவைகள் உமக்கு நேரிடக்கூடாது என்கிறார்(மனுஷ சிந்தனை). 

தேவனுக்கேற்ற சிந்தனை

·         தேவசித்தத்தை சார்ந்திருக்கும்            

·         தேவன் மீது மட்டும் தான் இருக்கும்.   

·         தேவன் என்னோடு இருப்பார் என்று நம்புவோம்(சங்23:4)

·         நம் கவனம் முழுவதும்  தேவன் மீதே இருக்கும்.

·         இதைக்குறித்து (நம் வாழ்வில் ஏற்படும் ஏதேனும் ஒரு சம்பவம்)தேவன் எப்படி சிந்திப்பார். (யோபு தேவனிடத்தில் நன்மையைபெற்ற நாம் தீமையை பெற வேண்டாமோ என்கிற எண்ணம்).

·         ஒரு முடிவை ஏற்றுக் கொள்ளும் எண்ணம். புதிய ஆரம்பத்தை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் நம் வாழ்வில் காணப்படும்.

 

 

மனுஷனுக்கேற்ற சிந்தனை

·         மாம்ச விருப்பத்தை சார்ந்திருக்கும்

·         சொகுசான வாழ்க்கையை விரும்பும்

·         உலகத்தின் மனிதர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிலேயே கவனம் இருக்கும்.

·         மற்றவர்கள் என்னைக்குறித்து என்ன யோசிப்பார்கள். தேவனை தூஷித்து ஜீவனை விடும் (யோபுவின் மனைவியின் எண்ணம்.)

·         முடிவையும், புதிய ஆரம்பத்தையும் குறித்து பயமும் கலக்கமும்.

 

    நம் சரீரம் கெட்டு போகக்காரணம் நம்முடைய சிந்தனை. ரோமர்8:5,6 மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். சங்138:8,கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.எரேமியா17:9 எல்லாவற்றை பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.

இந்த வாரம் செய்ய வேண்டியவை:

             தூங்க போகும் முன் 20 நிமிடம் கண்களை மூடி, சிந்திக்க வேண்டும். என்ன சிந்தனை வந்ததோ அதை எழுதி பார்க்க வேண்டும். சில தலைப்புகளின் கீழ் கொண்டுவந்து அது தேவனுக்கேற்ற சிந்தனையா? மனுஷனுக்கேற்ற சிந்தனையா? என ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவனுக்கு பிரியமில்லாத சிந்தனைகளை நம்மை விட்டு அகற்ற ஜெபிக்க வேண்டும்.

             காலை முதல் இரவு வரை நமக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்பட்டது. ஏன் ஏற்பட்டது என்பதை சிந்தித்து அது தேவனுக்கேற்றதா? மனுஷனுக்கேற்றதா? என்பதை சிந்தித்து அதை தேவனிடம் சொல்லி ஜெபிக்க வேண்டும். ஆமென்.


 


Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God