Youtube Link
https://www.youtube.com/watch?v=nBgGtWs_0Tc
வேதபகுதி: லூக்கா8:22-25
ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எப்படி? தொடர்ச்சி……
தலைப்பு: பயமும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கையில் சமாதானத்தை கண்டுபிடிப்பது எப்படி?
பயம் பதற்றம் இருப்பதற்கான அறிகுறிகள்:
அமைதியில்லாமல் இருத்தல்.
கவனம் செலுத்துவதில் குறைவு.
தசை பதற்றம்.
தூக்கமின்மை.
இவைகளை மேற்கொள்வது எப்படி?
1. பயம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
2தீமோத்தேயு1:7ல் தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
• ஒருநாளும் தேவன் பயத்தையும் பதற்றத்தையும் தருவதில்லை.
• பயத்தை கொடுப்பது பிசாசு.
• தேவனுடைய வார்த்தையை நம்புவதிலிருந்து திசைதிருப்புவதற்காக பிசாசு கொடுக்கிற நூதனமான திட்டம்.
• ஆண்டவரை எல்லா சூழ்நிலைகளிலும் நம்புவதற்கு பழக வேண்டும்.
• நாம் தேவனுடைய வார்த்தையை சரியாகக் கவனித்தால் பயம் நமக்குள் வராது.
2. தேவனுடைய வார்த்தை, மாத்திரமே நிரந்தரம்.
ஏசாயா41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்.
“பிரச்சனையின் மீது நம்முடைய கவனத்தைக் குவித்தால் பயம் அதிகமாகும்.
தேவன் மீது நம்முடைய கவனத்தைக் குவித்தால் நம்பிக்கை (விசுவாசம்) அதிகமாகும்.”
சங்கீதம்121:4,5ல், இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்.
ஆண்டவர் எல்லா சூழ்நிலைகளின்மீதும் அதிகாரம் கொண்டவர். தம்முடைய பார்வைக்கு நலமான காரியத்தை செய்து முடிப்பார்.
3. உங்களுடைய பயத்தையெல்லாம் ஜெபமாக மாற்றி விடுங்கள்.
1பேதுரு5:7ல், அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.
4. தேவனுடைய வார்த்தையினால் இருதயத்தை நிரப்பி விடுங்கள்.
2தீமோத்தேயு1:7
ஏசாயா41:10,13,14
யோவேல்2:21
ஏசாயா43:1
மாற்கு5:36
சங்கீதம்56:3
சங்கீதம்27:1
லூக்கா1:13
இந்த வசனங்களை தினமும் ஒரு நாளுக்கு 10 முறை வாசியுங்கள். இந்த வசனங்களை தியானித்து பாடல்களாக பாடுங்கள். இப்படி செய்யும் போது பயமும் பதற்றமும் நம்மைவிட்டு நீங்கும். ஆமென்.