Youtube Link
https://www.youtube.com/watch?v=T5UCbbGplSU
வேதபகுதி: சங்கீதம்46:10 “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”
2 இராஜாக்கள்18,19. எசேக்கியா ராஜாவுக்கு மிகப்பெரிய பிரச்சனை வந்த போதும் தேவனையே சார்ந்து கொண்டார். நம் வாழ்வில் பிரச்சனை வரும் போது இந்த பிரச்சனை தீராத என பல வழிகளை நாடி ஓடுகிறோம். பிரச்சனை வரும்போது தேவசமூகத்தில் அமர்ந்திருந்து தேவன் நம்முடைய வாழ்வில் செயல்படுவதற்கு இடம் கொடுக்க வேண்டும். தேவனையே நோக்கி பார்க்க வேண்டும். அவர் வார்த்தையை தருவார். அதை விசுவாசத்தோடு பற்றிக்கொண்டால் பிரச்சனை மாறும்.
(எ.கா:எசேக்கியா ராஜா) எசேக்கியா ராஜாவுக்கு எதிராக அசீரியா ராஜா சனகெரிப் வந்தபோது தேவன் வார்த்தையை தந்து வெற்றி தந்தார்.அப்போது பாடியது தான் 46வது சங்கீதம்.
• சங்கீதம்46:1,2,10. கர்த்தர் சொல்கிறார் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பயப்படாமல் அமர்ந்திருத்தல் வேண்டும். கர்த்தர் நல்லவர் என்பதை நம்ப வேண்டும். ஆண்டவரே நீர் என் பெலன், என் அடைக்கலம், ஆபத்து காலத்தில் அநுகூலமான துணை என்று அறிக்கைசெய்து நூறு சதவீதம் நம்பினால், எந்த சூழ்நிலையிலும் நம் மனதை அமைதிப்படுத்த முடியும்.
• தேவன் தம்முடைய நேரத்தில் கிரியை செய்வார் என்பதையும் நாம் நம்ப வேண்டும். அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்து முடிக்கிற தேவன். நாம் அவசரப்பட்டால் தேவனுடைய நடத்துதலை நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. கொஞ்ச காலம் காத்திருந்தால் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் தேவன் அற்புதங்களை செய்வார்.
(எ.கா:இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக செங்கடல், பின்னால் பார்வோன் படை இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனுடைய வழிநடத்துதல்)
தேவன் இன்னார் என்பதைப்புரிந்து அதை அங்கீகரிக்க வேண்டும். நம்முடைய தேவன் சர்வவல்லமையுள்ளவர். எல்லாவற்றையும் தம்முடையக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
• தனிப்பட்ட முறையில் நாம் தேவனை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவரோடு உள்ள உறவில் வளர்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். (எ.கா:ஆதியாகமம்28ல், தேவதூதர்கள் ஏறுவதும், இறங்குவதும்- யாக்கோபு சொப்பனத்தில் , ஆதியாகமம்32:30 யாக்கோபு தேவனை முகமுகமாய்க் கண்டேன் என்கிறார்.) ஆண்டவரை தேவனென்று அறிய வேண்டுமானால் முகமுகமாய் சந்திக்கிற அனுபவத்திற்குள் வர வேண்டும். சங்கீதம்27:8 என் முகத்தைத் தேடுங்கள் ….., 2நாளாகமம்7:14 என் நாமம் தரிக்கப்பட்ட ……….) அவருடைய முகத்தையே தேடுவதற்கும், அவரையே நோக்கிப்பார்க்கவும் கிருபைத் தாங்க என்று ஆண்டவரிடம் கேட்க வேண்டும். தேவன் கிரியை செய்யட்டும் என்று அவருடைய சமூகத்தில் பொறுமையாய் காத்திருக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவருடைய பிரசன்னத்தை அநுபவிக்க,அவருடைய முகத்தை தேட, தரிசிக்க நேரமெடுப்போம்.
எண்ணாகமம் 6:25,26- கர்த்தருடைய முகத்தை பார்த்தால் தான் நமக்கு சமாதானம், நிம்மதி,கிருபை. நாம் அமர்ந்திருந்து கர்த்தரே தேவன் என்று அறிந்து கொள்வோம்.