Youtube Link:
https://www.youtube.com/watch?v=ZLN40ZS6PXI
வேதப்பகுதி : எரேமியா 35:6-7 ல் யோனதாப் குடும்பத்தினர் தங்கள் தந்தை கூறியதால் திராட்சைரசம் குடிப்பதில்லை. 250 ஆண்டுகள் முன்பதாக கூறியவார்த்தை இவர்;கள் அப்படியே பின்பற்றினர். இந்தக் காரியத்தை தேவன் எரேமியாவிடம் சுட்டிக்காட்டி என் வார்த்தைகளை இந்த ஜனங்கள் கேட்பதில்லையே என வருத்தப்படுகிறார். யோனதாப் கூறிய 3 காரியங்கள்
1. திராட்சை ரசம் குடிக்கக்கூடாது.
2. பண ஆசை இருக்கக்கூடாது.
3. கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். நம் நிதானத்தை இழக்கச் செய்யும் காரியத்தை விட்டு வெளியே வர வேண்டும். எ.கா: கோபம், பணஆசை, மேட்டிமை, பாலுணர்வு.
1 தீமோத்தேயு 6:10 – பண ஆசை எல்லா தீமைக்கும் இருக்கிறது. பண ஆசை நிதானத்தை இழக்கச் செய்கிறது. என்னை ஆசீர்வதியும் என ஜெபிப்பது தவறல்ல , பிறரை விட என்னை ஆசீர்வதியும் என ஜெபிப்பது தவறு.
பெருமை நம்முயை நிதானத்தை இழக்கச் செய்கிறது.
பாலுணர்வு நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது.
இந்தக் காரியங்களால் நாங்கள் நிதானத்தை இழக்காமல் இருக்க கிருபை தாரும் என ஜெபிக்க வேண்டும். நம் வாழ்க்கை முறையை மாற்றக் கூடாது. தேவன் எந்த நிலையிலும் உயர்த்த வல்லவராய் இருக்கிறார். ஆனால் நம் வாழ்க்கை முறையை மாற்றக் கூடாது.