1. தேவனை கவனியுங்கள்
• தேவனுடைய கிரியைகளை எல்லாவற்றிலும் பார்க்க முடியும். ஆனால்
இதை உணர முடிகிறதா இதைத்தான் இந்த வேளையில் சிந்தித்து
பார்ப்போம்.
உதாரணமாக:
1. லூக்கா 23:39 - இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன்
ஒருவன், இவரோ தகாத ஒன்றையும் செய்யவில்லை என்கிறான்.
2. யோசுவா2: 10,11 (ராகாப்வேசி)
தேவனை குறித்து இவளுடைய பார்வை, உங்கள் தேவன் உயர
வானத்திலும், கீழே பூமியிலும் தேவன் என்று கவனித்து பார்க்கிறாள்
• தேவனுடைய செய்கைகளையும், கிரியைகளையும் யாரெல்லாம்
கவனித்து பார்க்கிறார்களோ, அவர்கள் மகத்துவமுள்ள
ஆசீர்வாதத்திற்கு உட்படுகிறார்கள்.
உதாரணமாக: 3 லூக்கா 15:18 - இளைய குமாரன்
• தகப்பனுடைய அன்பை கவனித்து பார்க்கிறார். அப்படி பார்த்ததினால்
அவர் உயர்த்தப்படுகிறார். நாம் எந்த அளவிற்கு தேவனை கவனித்து
பார்க்கிறோம்?
• கர்த்தருடைய செய்கைகளை ஆராய்ந்து பாருங்கள்.
சங் 46:8 – வந்து பாருங்கள்.
சங் 66:5 – செய்கைகளை வந்து பாருங்கள்.
சங் 111:2 – செய்கைகள் ஆராயப்பட கூடியவை.
மத் 6:26-29 (இயேசு இவைகளை கவனித்து பார்க்க சொல்கிறார்)
• ஆகாயத்துப் பட்சிகளை கவனித்து பாருங்கள்.
• நம்மை எவ்வளவு அழகாக பிழைப்பூட்டுகிறார் என்பதை கவனித்து
பாருங்கள்.
• காட்டுபுஷ்பங்களை எப்படி வளர்க்கிறார் என்பதை கவனித்து
பாருங்கள்.
தேவன் நம்மை வளர்க்கிறார், நம்மை பிழைப்பூட்டுகிறார் உதாரணமாக: சாலோமோன் - (இரண்டு பெண்கள் - ஒரு பிள்ளை)
ஜனங்களை நடத்துவதற்கு ஞானத்தை கேட்கிறார். தேவன் அப்படியே
கொடுத்தார். தேவனை சார்ந்து கொண்டால், சூழலுக்கேற்றார்போல் நமக்கு
ஞானத்தை தந்து, ஒரு வளர்ச்சிக்கு நேராக நடத்துகிறார். இதையெல்லாம்
கவனித்து பாருங்கள்.
ரூத் 3:10,18 - இந்த காரியம் என்னமாய் முடியுமென்று நீ அறியுமட்டும்
பொறுத்திரு
பிலிப்பியர் 4:6-9
உதாரணமாக : யோசேப்பு (அதி 41)
சிறைச்சாலையில் பானபாத்திரக்காரனால் மறந்து போனவன். 2
ஆண்டுகள் பொறுத்திருந்தான். ஒரு நாள் ராஜ சமூகத்திற்கு அழைத்து
செல்லபடுகிறான். சொப்பனத்திற்கு பதில் சொல்லுகிறான் பிறகு தேசத்தை
ஆளக்கூடிய இடத்திற்கு போகிறார். கர்த்தருடைய செய்கைகளை கவனித்து
கேளுங்கள்.
2) அவர் என்ன சொல்கிறாரோ, அவருடைய வார்த்தைகளை கவனித்து
பாருங்கள், கவனித்து கேளுங்கள்.
உபா 32:1,2 – பனித்துளிகள் புல்லின் மேல் இறங்குவது போல துளிதுளியாக
இறங்க பண்ணுகிறார்.
• சங் 29:1-11 – அவருடைய சத்தம் மகத்துவமானது.
• அவர் பெரும்பாலும் அமர்ந்த மெல்லிய சத்தத்தோடு பேச
விரும்புகிறார்.
• அப் 9:5 – முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம். (நாம்
திரும்ப திரும்ப ஒரு காரியம் செய்யும் போது, வலியை உண்டு பண்ணுமானால் அதை விட்டு விடுங்கள்).
• யாத் 3:5 – உன் கால்களிலிருக்கிற பாதரட்சையை கழற்றிப்போடு.
• உன் சுய அனுபவத்தை விட்டு விட்டு வா.
• உன் சுய பெலத்தை விட்டு விட்டு தேவனை சார்ந்து
கொள்.
தேவன் நடத்துவதை கவனித்து பாருங்கள்.
யோவான் 2:5 – அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன்படி
செய்யுங்கள்.
தேவனுடைய வார்த்தையை நிதானமாய் கவனியுங்கள், ஒரு வார்த்தையை
தருவார். அதில் ஜீவன் உண்டாயிருக்கும்.