Easter Service 31-03-2024
வேத பகுதி லூக்கா 24:1-12
லூக்கா 3,4,5,9,11
செய்தியின் தலைப்பு :அவர்கள் இவர்கள்.
இவர்கள் யார்? வசனம் லூக்கா 24:10
மகதலேனா மரியாள்: மாற்கு 16:10
மகதலேனா மரியாள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து ஏழு பிசாசுகளை துரத்தியிருந்தார்... பிசாசினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியிருப்பார்கள்? மனநிலையில் பாதிக்கப்பட்டவராய் ஒன்றை மட்டுமே சிந்திப்பார்கள். வேறொன்றையும் சிந்திக்க இயலாத தன்மை உடையவராய் இருப்பார்கள்.
யோவான்னாள்: லூக்கா 8:2,3
யோவான்னாள் என்பவள் ஏரோதின் (காரிய காரனின் மனைவி)
ஆளுகை செய்ய கூடிய நபரின் மனைவியாக இருந்த யோவான்னாள் நல்ல மதிப்பு மிக்கவளாய் காணப்பட்டாள்.
யோவான்னாள் தேவனுக்கு எப்படி ஊழியம் செய்தாள்? தன் ஆஸ்திகளால், மற்றும் கிறிஸ்துவுக்காய் செயல்படுகிற ஸ்தீரியாய் இருநலூக்கர்தாள்.
யாக்கோபின் தாயாகிய மரியாள் : அரசியல் பின்னணி
அடிமை தனத்தை மேற்கொள்ள விரும்புகிற ஒரு குடும்பம்;. ரோம அரசாங்கத்தை வெறுத்து அதை எதிர்த்து போராடுபவர்கள்.
எப்படியிருந்தார்கள். பயப்பட்டு, தலைகவிழ்ந்து, தரையை நோக்கி நின்றார்கள்.
வேத பகுதி லூக்கா 24:5 கிறிஸ்துவின் மீது அளவில்லாத அன்பு இருந்தது. அன்பு இருந்த அளவிற்கு விசுவாசம் (நம்பிக்கை) இல்லை.
உயிரோடு இருக்கிறவரை மரித்தவரிடத்தில் தேடினார்கள் நாம் எதிர்பார்க்கிற மாதிரி கிறிஸ்து செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்.
கலக்கம் நிறைந்தவர்களாயிருந்தார்கள்.
லூக்கா 24:7 நினைவு கூருங்கள் (இழந்து போன நன்மைகளை பற்றி புலம்பி கொண்டிருக்கிறோம்.
பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புகொடுக்கப்படுவார்.
சிலுவையில் அறையப்படுவார்.
3ம் நாளில் உயிரோடெ எழுந்திருப்பார்.
லூக்கா 24:8,19 நினைவு கூர்ந்து, கல்லறையை விட்டு திரும்பி போனார்கள். சீஷர்கள் மூன்றரை வருடம் இயேசுவோடு இருந்த போதிலும், இவர்கள் தான் நம்பவில்லை.