Youtube Link
https://www.youtube.com/watch?v=nCS5DZ4tMU0
வேதபகுதி : 2 கொரிந்தியர் 3:17,18 கர்த்தரே ஆவியானவர்;;;, கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு.
தேவன் நமக்கு விடுதலை தர விரும்புகிறார். இயேசு பூமிக்கு வந்ததன் காரணம் - ஜனங்களை பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்க. யோவன் 8:32,36 விடுதலை என்பது தேவனுடைய திட்டம், தேவனுடைய ஜனங்களுக்கு தேவன் கொடுக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் விடுதலை.
விடுதலை என்றால் என்ன?
யாருடைய அழுத்தமும் இல்லாமல் செயல்படுவதும் பேசுவதும் தான் விடுதலை. எந்தவொரு பழக்கத்திலும் முதலில் அடிமையாவது இல்லை கொஞ்ச கொஞ்சமாய் பழகி நாம் சிக்கிக் கொள்கிறோம். விடுதலைக்காக தேவனிடம் முறையிட வேண்டும்.
விடுதலைப் பெறுவதற்கு :
1. அடிமைத்தனத்தில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வு நமக்குள் இருக்க வேண்டும். எ.கா: சிம்சோன் (நியாய 14:1) (நியாய 16:1) சிம்சோனின் பார்வை அடிமைத்தனத்தில் சிக்க வைத்தது. சிம்சோன் உணர்வற்ற இருதயம் உள்ளவனாய் இருந்தான். இது தான் அவனுடைய வாழ்வில் மிகப்பெரிய தவறு.
ஜெபம் : ஆண்டவரே எனக்கு உணர்வைத் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.
2. தேவனுடைய வார்த்தை தேவ ஆவியானவர் கிரியை செய்ய நாம் இடம் கொடுக்க வேண்டும். நம்மை நிதானிப்பதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும். எ.கா: ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையின்படி இஸ்மவேலையும் ஆகாரையும் அனுப்பிவிட்டான்.
ஜெபம் : ஆண்டவரே நீர் என் வாழ்வில் கிரியை செய்ய நான் இடம் கொடுக்கிறேன்.
3. நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கரத்தில் கொடுக்க வேண்டும்.
எ.கா: லோத்து தேவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் இடம் கொடுக்காமல் போனான். அவனுடைய வாழ்வு மோசமாக இருந்தது.
ஜெபம் : ஆண்டவரே என் வாழ்க்கையை உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் என்று ஜெபிக்க வேண்டும். ஆமென்