Youtube Link
https://www.youtube.com/watch?v=PNzcvZQse4E
வேதபகுதி: லூக்கா8:48,50,52.
தலைப்பு: ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை
நம்முடைய சரீரத்தை வேதவசனத்தின் அடிப்படையில் எப்படி பாதுகாப்பது?
சரீரம் தேவனுக்கு சொந்தமானது. நாம் நம் சரீரத்தை கையாள தெரியாமல் நாமே கெடுத்துக் கொள்கிறோம். சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாததினால் சரீரத்தை அடக்க (அ) ஒடுக்க வேண்டும் என்று சொல்லி உபவாசம் என்கிற பெயரில் சரீரத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். சரீரம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. தேவனுடைய ஆலயம். பரிசுத்தமாக இருக்க வேண்டும். நமக்கு சரீர சுகத்தை தருகிறவர் நம்முடைய ஆண்டவர். நம்முடைய சரீரம் தேவனுடையது.
1கொரிந்தியர்6:19,20. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் , நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே: ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1.சரீரத்தை ஆண்டவர் நமக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்.
யோவான்5:5-14, முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த மனுஷனுக்கு இயேசு சுகம் கொடுத்தார். அதன் பின்பு அவனைப் பார்த்து. நீ சொஸ்தமானாய், அதிகக் கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
பாவம் என்பது சரீரத்தைக் கெடுக்கிற ஒரு காரியத்தை செய்தல். சரீரத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஆவிக்குரிய ஒழுங்கு ஆகும்.
தேவனே சரீரத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எனக்கு உதவி செய்யும் என்று ஜெபிக்க வேண்டும்.
2.சரீரத்தில் இச்சையடக்கம் மிக அவசியம்.
கலாத்தியர்5:22,23ன் படி ஆவியின் கனிகள் நமக்குள் காணப்படவேண்டும். ஆவியின் கனிகளில் இச்சையடக்கமும் ஒன்று.
1கொரிந்தியர்9:27ல் பவுல் சொல்கிறார். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
நீதிமொழிகள்25:27ல் தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல. சரீரத்திற்கு ஓய்வுவேண்டும். உடற்பயிற்சி மிக முக்கியமானது. சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சி இவைகளில் சுயக்கட்டுபாடு இருக்க வேண்டும்.
3.சரீரத்தை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.
ரோமர்12:1, அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
சரீரத்தை அசுத்தம் பண்ணுகிற விஷயம் எது என்று தெரிந்திருக்க வேண்டும். சில பொருட்களினால் (மதுபானம்,தேவையற்ற காரியங்களைப் பார்ப்பது) தங்கள் சரீரத்தை அசுத்தமாக்கிக் கொள்கிறார்கள். சில நடத்தைகள்(அ) குணாதிசயங்கள் கூட நம் சரீரத்தை கெடுத்து விடுகிறது. பாலுணர்வு சம்பந்தப்பட்ட உணர்வுகள் அதிகமாகதபடி நம் சரீரத்தை சரியாய் கையாள வேண்டியது நம் கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான பொறுப்பு. இதை நாம் கையாள வேண்டும்.
தேவன் வாசம் பண்ணுகிற இந்த சரீரத்தை கெடுத்து போடாதபடி பரிசுத்தமாய் காத்துக்கொள்ள உதவிசெய்யும் என்று ஜெபிக்க வேண்டும்.
இந்த வாரத்தில் நம்முடைய சரீரத்தில் கடைபிடிக்க வேண்டியவை:
1. ஒரு நாளைக்கு இரண்டு நேர சாப்பாடு போதும் , ஒரு நேரம் உபவாசம் என்று மனதில் வைத்துக்கொண்டு 2 வேளை சாப்பிட முயற்சி செய்தல்.
2. தினந்தோறும் 6 மணிநேரம் தூங்க முடிவு எடுத்தல்.
3. மொபைல் போனை நம் அருகில் வைத்து தூங்கக் கூடாது.
4. சரீரத்தை அசுத்த படுத்துகிற காரியங்கள் ஏதாவது இருக்குமானால் அதை நிறுத்துவதற்கும். சரியான ஒழுங்குக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
ஆமென்.