Youtube Link
https://www.youtube.com/watch?v=3OMqixYn1s4
வேதபகுதி: எபிரெயர்13:7 தேவவசனத்தை உங்களுக்கு போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து , அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய் சிந்தித்து , அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
தலைப்பு: தேவனுடைய வாக்குத்தத்தங்களில் எப்படி சமாதானத்தைப் பெற்றுக்கொள்வது?
(அல்லது)
தேவனுடைய வார்த்;தையை நம்பி நாம் எப்படி தேவசமாதானத்தைப் பெற்றுக்கொள்வது?
இரு குடும்பத்தினரின் விசுவாசம், கீழ்படிதல், வாழ்வின் முடிவு என இம்மூன்று காரியத்தைத் தியானிப்போம்.
1.நோவாவின் குடும்பம் - ஆதியாகமம் 6,7,8,9 அதிகாரங்கள்.
2.லோத்துவின் குடும்பம் - ஆதியாகமம்13(லோத்துவின் குடும்ப பின்னணியம்(அ) தன்மை.
ஆதியாகமம்14- லோத்து ஆபிரகாமிடமிருந்து பிரிந்து செல்லுதல்.
ஆதியாகமம்18-லோத்தின் குடும்ப அழிவை தேவதூதர்கள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துதல்.
ஆதியாகமம்19- லோத்தின் குடும்ப அழிவு.
இரண்டு குடும்பத்தின் (நோவா,லோத்து) காலக்கட்டத்திலும் அழிவு உண்டானது.
நாம் தியானிக்கும் 2 பெண்கள் நோவா மனைவி, லோத்துவின் மனைவி. இவர்கள் இருவருமே நீதிமானை திருமணம் செய்து கொண்டவர்கள்.
(2 பேதுரு2:7,8)(ஆதி6:9)
இவர்கள் காலக்கட்டத்தில் பாவம் பெருகியிருந்தது. 2பேரின் துணைவியரும் கணவன் மாருக்கு ஈடுகொடுத்து வாழ்ந்த போதிலும், ஒருகுடும்பம் ஜெயம்பெற்ற குடும்பமாய் இருந்தது. மற்றொரு குடும்பம் தேவனுடைய பார்வையிலும் , நம்முடைய பார்வையிலும் தோற்றுபோன குடும்பமாய் இருந்தது.
1. குடும்பத்தின் தலைவர்கள் மிகமிக முக்கியமானவர்கள். ஒரு குடும்பத்தில் கணவனிடம் விசுவாசம் இருந்தால் அது மனைவியிடம் நிச்சயம் விசுவாசத்தை ஏற்படுத்தும்.
நோவாவின் கீழ்படிதல் நீதிமானாகிய தன்மை அவனுடைய குடும்பத்திற்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2.தேவனுடைய எச்சரிப்பு வரும்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்த நோவா பைத்தியமாய் பார்க்கப்பட்டான். ஆனாலும் அந்த சூழ்நிலையில் அதை அப்படியே நோவாவின் மனைவியும் ஏற்றுக்கொண்டாள்.
தேவனுடைய வார்த்தையை நம்புகிற பழக்கம் நமக்குள் வேண்டும்.
நோவாவின் மனைவி தேவனுடைய எச்சரிப்புக்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டாள்.
லோத்துவின் மனைவி தேவனுடைய எச்சரிப்பை பெற்றும் அந்த இடத்தை விட்டு நகராதிருந்தாள். நாமும் எதை விட்டுவிட வேண்டுமோ அதை விட்டுவிட வேண்டும். எச்சரிப்பு பெற்றும் மனம் திரும்பாததால் உப்புத்தூண் ஆனாள்.
3.கடந்த காலத்தை குறித்தும் எதிர்காலத்தை குறித்தும் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
எதிர்காலத்தை குறித்த நம்பிக்கை நோவாவின் மனைவிக்கு இருந்தது. பாவம் நிறைந்த வாழ்க்கையைவிட்டு வெளிவரமுடியாமல் லோத்துவின் மனைவி இருந்தாள்.
கடந்த காலத்தை குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு (பாவத்தை) எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும்.
குடும்பத்தை நடத்தும் காரியங்கள் அவசியம். குடும்பம் அமைதியாய் சமாதானமாய் வாழ வேண்டுமானால் அதில் பெண்களின் பங்கு முக்கியமானது.
நோவாவின் மனைவி 3 மருமகள்களோடு பேழைக்குள்1 வருஷம் வாழ்ந்து வந்தார்கள். குடும்ப நிர்வாகத்தை சரியாய் கவனித்தார்கள்.
பிள்ளைகளை பயபக்தியாய் வளர்த்தார்கள்.
ஒழுக்க வாழ்வைக்குறித்த சரியான போதனை லோத்துவின் பிள்ளைகளுக்கு இல்லை.
நோவாவின் மனைவியின் முடிவு குடும்பம் செழித்தது. லோத்துவின் மனைவியின் முடிவு தேவனுடைய பார்வையில் அருவருப்பான சந்ததியானது.
தேவன் நமக்கு தந்த வாக்குத்தத்தங்களை எழுதி அறிக்கை செய்ய வேண்டும்.
தேவன் விட்டுவிட சொல்லும் காரியங்களை விட்டுவிட வேண்டும்.
நாம் வெட்டியாகவும் பேசக்கூடாது, வெட்டியும் பேசக்கூடாது. ஆமென்.