வேதபகுதி: 2நாளாகமம் 15:2, தேசத்தின் ராஜாவுக்கும் அவனை பின்பற்றுகிற நபர்களுக்கும் சொன்ன வார்த்தைகள்.
2 நாளாகமம்;:14,15,16 இஸ்ரவேல் தேசம் 2 ஆக பிரிக்கப்படுகிறது. தெற்கு ராஜ்யத்தில் உள்ளவர்கள் விக்கிராக ஆராதனைக்கு தங்களை விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் ஆசா ராஜா தாவீதைப் போல, ஆண்டவருக்கு பிரியமானதை செய்தான். அவன் செய்த முக்கிய விஷயம் 2நாளாகமம் 14: 3, சுத்திகரிப்பின் பணியை செய்ததால், அவன் மூலம் தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிட்டார். இந்த நிலையில் தன் மாம்சத்தின்படி செய்யாமல் நன்மைக்கேதுவாக சில பட்டணங்களை கட்டி பலப்படுத்துகிறான், 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2 நாளாகமம் 14: 11, ல் தேசம் அமைதியாக இருந்தது. இந்த நிலையில், தீர்க்கதரிசி 3 வார்த்தைகளை சொல்லுகிறார், நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடினால், அவர் உங்களுக்;கு தென்படுவார், நீங்கள் அவரை விட்டுவிட்டால், அவரும் உங்களை விட்டு விடுவார். தேவனோடு பலப்படும் படிக்கு இந்த வார்த்தை வந்தது.
1. நீங்கள் கர்த்தரோடிருந்தால்: மாற்கு 3: 13,14.15. சீஷர்களை தெரிந்து கொள்ளும் போது தம்மோடு இருக்க தேவன் அழைத்தார். ஆதியாகமம் 1ல், தேவன் மனிதனை படைத்ததின் நோக்கம், தன்னோடு கூட இருக்கும்படிக்கு.
யாத்திராகமம் 3:14, இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயோடு சொல்லுகிறார். நாம் 24 மணி நேரமும் தேவனோடு இருக்கிறோமா?
2. நீங்கள் அவரை தேடினால்: தானாக முழு இருதயத்தோடு தேவனிடத்தில் திரும்புதல் (தேவனுக்கு நேராக சிந்தையை ஒருமுகப்படுத்துதல்). 2 நாளாகமம் 16:7-10 எல்லாவற்றிலும் கர்த்தரை சார்ந்து கொள்;ள வேண்டும்.
1சாமுவேல் 9 ம் அதிகாரத்தில் சவுலின்; ராஜ்யபாரம் அவனை விட்டு நீங்கியது. 1சாமுவேல் 17 :45,46. தாவீதுக்கு ஏராளமான நன்மைகளை கர்த்தர் கொண்டு வந்து நிறுத்தினார்.
3. எல்லாவிதமான தீமைகளை பாவமான பழக்கங்களிலிருந்து விலகி தேவன் பக்கமாக திரும்புதல். 2 நாளாகமம் 14:1,2,3,4 ஆமோஸ் 5:4, 14 ல், நாம் பிழைத்திருக்க வேண்டுமானால் அவர் உணர்த்துகிற காரியங்களை உங்களை விட்டு அகற்றி பாருங்கள், அதன் மூலம் கர்த்தர் உங்களை பிழைப்பூட்டுகிறார். தொடர் முயற்சியோடு ஆர்வத்தோடு தேடுவதற்கு தேவ சமூகத்தில் ஒப்பு கொடுங்கள்.
ஓசியா 5:15 ல், கர்த்தரை கருத்தாய் தேட வேண்டும். அனுதினமும் வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும் வேண்டும். எலியா கருத்தாய் ஜெபித்தான். செப்பனியா 2:3, மனத்தாழ்மையைத் தேடுங்கள். என்னால் அல்ல, நான் உம்மை சார்ந்து கொள்கிறேன் என்று தேவ சமூகத்தில் ஜெபிக்க வேண்டும்.
ஆசா ராஜா, கால்களில் வியாதிப்பட்டான். அந்நேரத்திலும் தேவனைத்தேடாமல், பரிகாரிகளையேத் தேடினான். தேவ பிரசன்னத்தை நாடுங்கள், அவர் நம்மோடிருந்தால், எந்த காரியத்தையும் செய்ய பெலன் உண்டாகும். ஆமென்.