Youtube Link
https://www.youtube.com/watch?v=HE4SlMOk29U
வேதபகுதி
: ரூத் 2:12
சங்கீதம் : 91 ம் அதிகாரம்
தலைப்பு :
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டை.
செட்டை (பறவைகளின்) – குஞ்சுகளை பாதுகாக்க, உயர பறக்க, ஆகாரத்தை வேகமாய் எடுத்துக்கொள்ளப் பயன்படுகிறது.
தேவனுடைய செட்டை : பாதுகாப்பு, அடைக்கலம், தேவ பிரசன்னம், தேவன் தரும் பராமரிப்பு , நம் தேவையை சந்திப்பது போன்றவற்றைக் குறிக்கிறது.
சங் 36:7 ல், தேவனே , உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
சில ஜெபங்கள் கேட்கப்படாததற்கு காரணம் கூட நம் மேல் அவர் வைத்த கிருபை ஆகும். சங் 57:1ல், உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது : விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
தேவனுடைய செட்டை செய்யும் காரியங்கள்:
1. விடுவிக்கும் செட்டை (யாத் 19:4)
• நம்மை அடிமைப்படுத்தின காரியத்திலிருந்து தேவன் நம்மை விடுவித்தாரா?
• நம்மை அவரண்டை சேர்த்துக் கொண்டாரா?
என்பதை ஆராய்ந்து பார்க்கவும்.
நம்முடைய சிந்தையின் அடிமைத்தனத்தை தேவனுடைய ஊடுருவல் தான் விடுவிக்க முடியும். வேதாகமத்தில் எடுத்துக்காட்டாக : யோனா –தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படியாமல் போனபோது, தேவனுடைய இடைப்படுதல் அவனை நடுக்கடலில் நிறுத்தியது, தேவனுடைய ஊடுருவல் அவனை மீனின் வயிற்றுக்குள் தள்ளியது. நம்முடைய வாழ்க்கையிலும் விடுதலை வேண்டுமானால் தேவனுடைய ஊடுருவல் நடக்க வேண்டும். ஆண்டவரே நீர் என் வாழ்க்கையில் இடைப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். ( நம்மால் சாத்தியமல்;;ல என நினைக்கும் காரியங்களில் தேவன் இடைப்பட விரும்புகிறார்.)
2. அடைக்கலம் தரும் செட்டை (சங் 91:4,5)
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார் அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
உபா 32:8 ல், ( உன்னதமானவர் ஜாதிகளுக்கு……………. திட்டம் பண்ணுகிறார்.)
நம்முடைய எல்லைகளை தேவன் திட்டம்பண்ணுகிறார். நாம் எங்கு, எந்த இடத்தில் வாழ வேண்டும் என எல்லையை தேவன் திட்டம் பண்ணுகிறார். உபா 32:10 ல், அவருடைய கிருபையுள்ள கண்கள் நம்மை கண்டுபிடித்தது, நடத்தியது, உணர்த்தியது, கண்மணியைப் போல காத்தது. உபா 32:11 ல், கழுகு கூட்டைக் கலைத்து, தன் செட்டைகளை விரித்து, தன் குஞ்சுகளை சுமந்து கொண்டு போகிறது போல, தேவன் நம்மை சுமந்து கொண்டு செல்வார். அடைக்கலம் தரும் தேவனிடம் நீர் தான் என் தஞ்சம் உம்மை நம்பி வருகிறேன் என வர வேண்டும்.
• செட்டைகளுக்குள் வைத்;து நம்மை பாதுகாக்கவும் அவர் வல்லவர்.
• செட்டைகளின் மேல் நம்மை சுமந்து உயர நம்மை பறக்க வைக்கவும் அவர் வல்லவர்.
அவரை நம்பி அவருடைய செட்டைகளுக்குள் வர வேண்டும். ஆமென்.