Youtube Link
https://www.youtube.com/watch?v=sIKc7OZym2c&t=3176s
வேதபகுதி : ஏசாயா 62 :3,4 ரூ 64:8
தலைப்பு : உருமாற்றம் அடைதல்.
உருமாற்றம் என்பது , நமக்கு கொடுக்கப்பட்ட அமைப்பிலிருந்து தேவன் நமக்கு வைத்துள்ள உண்மையான அமைப்பிற்கு மாறுவது.
உதாரணம் : யோசேப்பு தகப்பபன் மடியில் மகிழ்ச்சியாக வாழ்வது இப்படி தான் தன்னுடைய வாழ்க்கை இருக்கும் என்று நினைத்தான். ஆனால் தேவன் அவனை தேவசித்தத்திற்கு நேராக நடத்தினார். முதலில் அவர் பெற்றது குழியின் அனுபவம் , பின்பு போத்திபார் வீடு , அதன் பின்பு சிறைச்சாலை. இது யோசேப்பு உருவாக்கப்படுகிற அனுபவம். தேவன் 2 வருடங்கள் கழித்து யோசேப்பைத் தீவிரமாக சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டு வந்து உயர்த்துகிறார். முழு உலகத்திற்கும் ஆகாரம் கொடுக்கிற அலங்காரமான கிரீடமாக யோசேப்பைத் தேவன் மாற்றினார். இதுவே யோசேப்பின் உண்மையான அமைப்பு.
பேதுரு மீன் பிடிப்பதில் வல்லவர். ஆனால் தோல்வியோடு இருக்கும்போது இயேசு குறுக்கிடுகிறார். கலிலேயேக் கடலில் மீன் பிடிக்க முடியாது என்பதை அறிந்த பேதுரு தனக்குப் புரியாவிட்டாலும் இயேசு சொன்னதை நம்பி வலையைப் போட்டான் , இயேசு அவரை மனிதனாகப் பிடிப்பவனாக மாற்றினார். இதுவே பேதுருவின் உண்மையான அமைப்பு.
புரிகிறதோ புரியவில்லையோ கர்த்தருக்கு கீழ்படிந்தால் ஆசீர்வாதம்.
1. பார்க்க வைத்தார் - வந்து பாருங்கள் (யோவான் 1:39) நம் வாழ்விலும் அநேக காரியங்களை பார்க்க வைத்தார்.
2. கேட்க வைத்தார் - பல பிரசங்கங்களை சீடர்களுக்கு போதித்தார்.
3. துரிதப்படுத்துவார் - கடினமான இருள் சூழ்ந்த பாதையின் வழியே நம்மை நடத்தும் போது சூழ்நிலையினைத் தேவன் மாற்ற மாட்டார். ஆனால் கூட இருக்கிறார். தேவ நடத்துதலுக்கு வர தேவன் இவ்வாறு நம்மை நடத்துகிறார். கிறிஸ்தவ வாழ்வை ருசி பார்த்தவர்கள் எல்லா சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பார்கள். யோசேப்பு போத்திபார் வீட்டிலும் சிறையிலும் அமைதியாகவே இருந்தான். கர்த்தர் அவனோடு இருந்தார். அலங்காரமான கிரீடமாக நாம் மாறும்போது சரித்திர மாற்றம் ஏற்படும். அப் 19 ல் ,முதன் முறையாக புறஜாதியாருக்கும் இயேசு தான் தேவன் என்கிற சரித்திர மாற்றம் உலக அளவில் ஏற்பட்டது. நாம் நம்மை அர்ப்பணிக்கும் போது தேவன் நம்மை அலங்காரமான கிரீடமாக மாற்றுவார்.