Youtube Link
https://www.youtube.com/watch?v=29HL587j-mY
வேதப்பகுதி : ரூத் 2:12; யோவான் 1:1-12
நிறைவான பலன் என்றால் என்ன?
தீமை செய்தால் - தீமை வரும்
நன்மை செய்தால் - நன்மை வரும்
எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம். நன்மை செய்தால் நன்மை கிடைக்கும், தேவன் அவர்களுக்கு நிறைவான பலனும் கிடைக்கும் படி செய்கிறார்.
ரூத் வாழ்க்கையில் கிடைத்த நிறைவான பலன் என்ன?
செய்கைக்குத்தக்க பலன் - அடிப்படைத் தேவைகள் ரூத்துக்கு கிடைத்தது.(சாப்பாடு, இடம், தண்ணீர்)
ரூத்தின் அடையாளம் :
ரூத் ஒரு மோவாபியத் தேசத்துப் பெண். இவர்கள் இஸ்ரவேலருக்கு அருவருப்பானவர்கள்.
1. புறக்கணிக்கப்பட்ட சந்ததியை சார்ந்தவள்.
2. நன்மையை இழந்தவள்.
3. இளம் வயதில் விதவையானவள்;;.(ரூத்1:5)
4. வறுமைக் கோட்டிற்கும் கீழானவள்.
5. அந்நிய தேசத்தாள்.(ரூத் 2:10)
6. மன அழுத்தமும் பாரமும் நிறைந்த வாழ்க்கைமுறையை உடையவள்.
இப்படிப்பட்ட மோசமான அடையாளத்தை உடையவளுக்கு தேவன் புதிய அடையாளத்தை கொடுத்து நிறைவான பலனையும் கொடுத்தார். ஒரு மனிதனுடைய மோசமான அடையாளத்தை மாற்றுவதைவிட நிறைவான பலன் என்னவாக இருக்கும்?
• தேவன் நம்முடைய அடையாளத்தை மாற்ற விரும்புகிறார்.
எப்படி ரூத்தின் அடையாளம் மாற்றப்பட்டது?
ரூத் 4:11 ல், கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேல் லேயாளைப் போல வாழ்ந்திருக்கும்படி ரூத்திற்கு ஆசீர்வாதம் கிடைத்தது. வாழ்க்கையே இருக்குமோ இல்லையோ என்ற சூழ்நிலையில் இருந்த ரூத்திற்கு தேவன் புதிய அடையாளத்தை கொடுத்து உயர்த்தினார்.
நம்முடைய அடையாளம் என்ன இப்போது நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம் என்ன என்பதை யோசித்து எழுதி தேவசமூகத்தில் ஜெபிக்க வேண்டும்.
யோவான் 1:9ல், உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. ஆதி1:1-4 ல், (தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.) நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளையும் பிரிக்கிறார்.
எது இருள்?
1. பாவம் (ஏசாயா59:1,2)
ஜெபத்திற்கு தேவன் செவிகொடாதபடி இருக்கும் பாவத்தை தேவனிடம் அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும்.
2. தேவனோடு உறவு இல்லாமல் இருப்பது.
இந்தவருட இறுதிக்குள் தேவனுடனான உறவை சரிசெய்ய வேண்டும்.
3. கிறிஸ்துவை அறியாமல் இருப்பது.
(கிறிஸ்துவை அறிந்தவர்களாய் நாம் இருக்க வேண்டும்.)
இயேசு யார் என்ற சரியான புரிதல் வேண்டும். அவரை அறிகிற அறிவில் வளரும்போது இருள் மாறும். நாமும் தேவனை சார்ந்து கொண்டு (ரூத்தைப் போல) இருளை அகற்ற வேண்டும். ஆமென்.