Youtube Link
https://www.youtube.com/watch?v=jvJnQdAtIo0
தலைப்பு :
சிறுமைப்படுத்தப்படுகிறேன் என நினைப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 4 சத்தியங்கள்.
வேதபகுதி : நியாயாதிபதிகள் 6:12
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
நியாயாதிபதிகள் 6:1-4 (சிறுமைப்படுத்தப்படுதல்)
1. நியாயாதிபதிகள் 6: 10,11 (நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், …………. ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.)
தேவன் இன்னும் நம்மை நேசிக்கிறார். இஸ்ரவேலர் தேவனை விட்டதால் அவர் இஸ்ரவேலரை 7 வருடம் மீதியானியரின் கைகளில் ஒப்புக் கொடுத்தார். இந்த நிலைமைக்கு இஸ்ரவேலரே காரணம். ஆனாலும் தேவன் அவர்களை நேசித்தார். நாமும் பாவம் செய்திருந்தாலும் தேவன் நம்மை நேசிக்கிறார். இயேசு நம்மை நிபந்தனையற்ற அன்புடன் நேசிக்கிறார்.
2. நியாயாதிபதிகள் 6:12 - நாம் பராக்கிரமசாலிகள். எல்லாவற்றையும் நம்மால் ஜெயிக்க முடியும். நான் நினைப்பது என் அடையாளம் அல்ல. பிறர் நம்மைப் பற்றி நினைப்பதும் நம் அடையாளம் அல்ல. சில சூழல் நமக்குத் தருவதும் நம்முடைய அடையாளம் அல்;ல. வேதவசனம் தருவது தான் நமது அடையாளம்.
3. நியாயாதிபதிகள் 6:14 - இப்பொழுது நமக்கு இருக்கிற இந்த பலன் போதுமானது. ஏனெனில் வானத்தையுயம் , பூமியையும் படைத்த கர்த்தர் நம்மோடு இருக்கிறார். இந்த வருடம் 2025- ஐ நம்மால் ஆசீர்வாதத்தோடு கடக்க முடியும். நமக்கு இருக்கிற கொஞ்ச பலன் (பணம்,உழைப்பு) போதுமானது. தேவன் நம்மை ஜெயிக்க வைப்பார்.
4. நியாயாதிபதிகள் 6:16 - ஒரே மனுஷனை முறியடிப்பது போல மீதியானியரை முறியடிப்பாய் எனக் கர்த்தர் கிதியோனிடம் கூறினார். இதேபோல் தான் நிச்சயம் நாம் நம் பிரச்சனையை முறியடிப்போம். இதற்காக நாம் சத்தியத்தை வேதவசனத்தை அறிக்கையிட வேண்டும். எனவே நாம் எதில் எல்லாம் சிறுமைப்படுத்தப் பட்டிருக்கிறோமோ அவை எல்லாவற்றிலும் தேவன் ஜெயத்தைத் தருவார். ஆமென்.