வேத பகுதி
யோவான் 15:7
எல்லா வல்லமைக்கும் மேலான உயர்ந்த வல்லமை ஒன்று இருக்கிறது. அது தான் கடவுள்.
கிறிஸ்துவில் நிலைத்திருப்பது என்றால் என்ன?
1. அவரோடு கூட இருக்கும் உறவில் நிலைத்திருப்பது.
கிறிஸ்துவம் என்பது மதம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை ஆகும்.
இந்த வாழ்க்கை முறையில் அவரோடு கூட இருக்கும் உறவில் எப்படி நிலைத்திருக்க வேண்டும்?
ஜெபம் - தினமும் ஜெபம் செய்ய வேண்டும்.
ஜெபம் தான் தேவனோடு இருக்கும் உறவில் வளருவதற்க்கான முதல் படி.
எதற்காக ஜெபிக்க வேண்டும்?
தேவனுடைய சமுகத்தில் அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க மற்றும் அவருடைய உறவில் வளர...
தேவனுடைய வார்த்தைக்கு இடம் கொடுங்கள்
அவருடைய வார்த்தை நம்முடைய சிந்தனையை நிரப்பவுதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தைக்கு நமக்குள் இடம் கொடுக்காவிட்டால் அது நமக்குள் கிரியை செய்ய முடியாது...
கர்த்தருடைய வார்த்தை நம்மை பெலப்படுத்துவதாகவும் நம்முடைய உணர்வுகளுக்கு இடம் கொடுக்கிறதாயும் இருக்கிறது...
வேதபகுதி
அவர் சர்வ வல்ல தேவனாயிருந்தும் கீழ்படிந்திருந்தார்(இயேசு)
லூக்கா 2:51
மரியாள் (தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் வைத்து சிந்தித்தாள்).
தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் வைத்து சிந்திக்க வேண்டும்.
தேவ பெலத்தை சார்ந்து கொள்ளுவது
நம்முடைய கை கால் அவயங்கள் சரீரத்தை சார்ந்து கொள்ளும் போது அதனால் அசைக்க முடியும்.
திடீரென்று கை கால் அவயங்கள் சரீரத்தை சார்ந்து கொள்ளாத போது அதனுடைய செயல்பாட்டை இழக்கிறது.
தேவனுடைய வார்த்தையை எப்போதும் சார்ந்து கொள்ள வேண்டும்.
அவரில் நிலைத்திருப்பதானால் உண்டாகும்
நன்மைகள்
1யோவான் 3:6
அவருடைய வார்த்தை நமக்குள் நிலைத்திருக்கும் போது பாவம் செய்ய முடியாது
1யோவான் 4:12
ஒருவரிடத்தில் ஒருவர் நாம் அன்பு கூற முடியும்.
அன்பு என்பது பெற்றுகொள்ளுவது மட்டும் அல்ல கொடுப்பது
லூக்கா 6:38
மற்றவர்களிடத்தில் நாம் அன்பை பெறுகிறவர்களாய் மாத்திரம் அல்ல, மற்றவர்களுக்கு அன்பை கொடுக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
கொடுப்பது என்பது காணிக்கை கொடுப்பது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு அன்பு மன்னிப்பு நாம் கொடுக்க வேண்டும்
யோவான் 5:56
நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறேன் என்பதற்கான அடையாளமே கர்த்தருடைய பந்தி.
கர்த்தருடைய பந்தியில் பங்குபெறும் யாவரும் கசப்பு உணர்வோடு, பாவ உணர்வோடு, பாவ வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு பங்கு பெற கூடாது.
1கொரி 1:27
நாம் நம்மை சுத்திகரித்து கொண்டு கர்த்தருடைய பந்தியில் பங்குபெற வேண்டும்.