Youtube Link
https://www.youtube.com/watch?v=v3YZGVyTWuY
வேதபகுதி : ஏசாயா 41:10, நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்…
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் .
தேவன் முதலில் நம்மைப் பலப்படுத்துகிறார். பிரச்சனைக்காக நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் பிரச்சனையை உடனே தீர்ப்பதில்லை ஆனால் நம்மைப் பலப்படுத்துகிறார். நம்முடைய பலவீனத்தை நாம் புரிந்து கொண்டால்தான் தேவனுடைய உதவியை , பலத்தைப் பெற முடியும். நான் என்ன செய்ய தேவன் எதிர்ப்பார்க்கிறார் என்பதை நீதி 21:31 ல், நாம் அறிய வேண்டும். நாம் செய்ய வேண்டிய வேலையை நாம் செய்யும் போது தான் தேவன் அற்புதம் செய்வார். இடம் கொடுக்க வேண்டியது நம் பொறுப்பு. அற்புதம் செய்வது தேவனுடைய வேலை.
ஆண்டவர் நம்மை எப்படி பலப்படுத்துகிறார்?
1. வார்த்தையைக் கொடுத்து பலப்படுத்துகிறார்.
ஆதியாகமம் 28:12-15. யாக்கோபுக்கு தேவன் வார்த்தையை கொடுத்து பலப்படுத்தினார். அடுத்த நிலைக்கு நாம் செல்ல நமக்கு பிரியமானவர்களை நமக்கு எதிராக எழுப்புகிறார். எல்லா சூழ்நிலையிலும் தேவனை சார்ந்து கொள்ள வேண்டும். யாக்கோபு
தேவனை சார்ந்து கொள்ளும் போது ஏசாவை சந்திக்க பெலன் தந்தார்.
2. எலியா- 1இராஜக்கள் 17:1 – புலம்பல் மூலம் பலப்படுத்துகிறார்.
எலியா தேவ சமூகத்தில் புலம்பிய பின், தேவன் எலியா செய்த காரியத்திலும் பெரிய காரியங்களை செய்ய வைத்தார். 1 இராஜக்கள் 19:10,14.
3. தேவன் தம்முடைய ஆவியினால் பலப்படுத்துகிறார்.
அப்போஸ்தலர் 1:8 ல், ஆவியானவர் சுட்டிக்காட்டுகிறார். கற்றுக் கொடுக்கிறார், கிருபை தருகிறார். ஆவியானவரின் பெலனை சார்ந்து கொள்ளும் போது அவர் நம்மை பெலப்படுத்தி நடத்துவார். ஆமென்.