Youtube Link
https://www.youtube.com/watch?v=63W7FxhrHnM
வேதப்பகுதி : ஏசாயா 62:1-5, நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
1. கர்த்தர் மறுபடியும் மறுசீரமைத்து புதுப்பிப்பார்.
2. ஒரு புதிய அடையாளத்தைக் கர்த்தர் காண்பிப்பார்.
3. தேவ அன்பு மாறாதது.
வேதத்தின் மூலமாக நாம் நடக்க வேண்டிய வழியை தெளிவாக எடுத்து சொல்கிறார். என் ஜனம் மனம் திரும்ப வேண்டும் என விரும்புகிறார். ஆனால் ஜனங்கள் மனம் திரும்பாத பட்சத்தில் தம் முகத்தை அவர்களை விட்டு திருப்பிக் கொண்டார். ஆனால் ஜனங்களோ தேவன் எங்களை கைவிட்டுவிட்டார் என புலம்பினர்.
என்னுடைய பிரச்சனைகளுக்கு , என்னுடைய மீறுதல் தான் காரணம் என உணர்ந்து தேவனிடத்தில் நம்மை அர்ப்பணித்தால் தேவன் நம்மை திரும்பக் கட்டுவார். நம் தேவனோ நீ எவ்வளவு சீர் கெட்டு போனாலும் நீ என்னிடத்;தில் திரும்பி வந்தால் நான் உன்னை சீர்படுத்தி உன்னைக் கட்டுவேன் என்கிறார். தேவன் மட்டுமே நம்மை திருப்தியாக நடத்த முடியும். எரேமியா 2:13ல், ஜனங்கள் 2 தீமைகளை செய்தார்கள்.
1. ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய கிறிஸ்துவை விட்டு விட்டார்கள்.
2. தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டியைத் தேடிக்கொண்டார்கள்.
தேவனே என் வாழ்வில் உள்ள வெடிப்புள்ள தொட்டிகளை எனக்குக் காண்பியும் என ஜெபிக்க வேண்டும். நமக்குத் தெரியாமலேயே சில வெடிப்புள்ள தொட்டிகளை நாம் பிடித்து வைத்துள்ளோம். ஆனால் நாம் தேவனிடத்தில் வந்தால் தேவன் நம்மை தப்புவித்து ஆசீர்வாதமாய் நடத்துவார். ஆமென்.