×
வேதம் கூறும் மன அழுத்தத்திற்கான காரணங்கள் | Vedham Kurum mana aluthathirkana Karanangal | 06 April 2025 | Rev. B. Samuel | PAG

Youtube Link

https://www.youtube.com/watch?v=dEMdh7q5Wg8


வேதபகுதி: 1பேதுரு5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.

தலைப்பு: வேதம் கூறும் மன அழுத்தத்திற்கான காரணங்கள்

ஏசாயா59:1-4

1.பாவம்: ஒருவர் மனஅழுத்தத்தில் இருப்பதற்கு பாவம் ஒரு காரணமாக இருக்கலாம்.

நம் வாழ்க்கையில் காணப்படுகிற பாவங்கள் அக்கிரமங்கள் இவைகளிலிருந்து மனந்திரும்ப நம்மை அர்ப்பணிக்கும் போது தேவன் விடுதலை தருகிறார். கர்த்தரை தேடாமல் உலக நபர்களை தேடும்போது , கர்த்தருக்கு பிரியமற்ற காரியங்களை செய்யும் போது மனஅழுத்தம் ஏற்படுகிறது.

.கா:லூக்கா15:14,15ல் இளைய குமாரன் தகப்பனோடிருப்பதை தவிர்த்து உலகத்தோடிருக்கும் உறவை விரும்பியதால் மனஅழுத்தம் உண்டானது பின் தன் தவறை உணர்ந்து மனந்திரும்பி தகப்பனிடம் வந்தான். நாமும் பாவத்தை விட்டு மனந்திரும்ப வேண்டும். (நீதி 10:12)

2.பகை: எந்த மனிதரோடும் பகை நமக்கு வேண்டாம். பகை விரோதத்தை உருவாக்கும். பகை மனஅழுத்தத்தை அதிகரிக்கும் எனவே பிதாவானவர் நம்மை மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். (பிலி4:6,7)

3.பாடுகள்: பாடுகள் நம்மை மனஅழுத்தத்திற்கு உள்ளாய் தள்ளும். பாடுகள் வழியாய் செல்லும்போது தேவனை நோக்கி பார்க்க வேண்டும். தேவன் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். பாடுகளின்; வழியே செல்லும் போது கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். (ஏசாயா41:10-11)

4.பயம்: தேவன் நம்மோடு இல்லை என்கிற உணர்வு தான் பயத்தை தருகிறது. பயம் மனஅழுத்தத்திற்குள்ளாய் தள்ளும். அதிக பயத்தினால், செய்யும் காரியங்களை செய்யாமல் தவிர்க்கிறோம். தேவன் நம்மோடு இருக்கிறார் என நினைத்து பயப்படாமல் வாழ வேண்டும். (பிலி4:8)

5.தேவையற்ற காரியங்களை சிந்தித்தல்:

தேவையற்ற காரியங்களை யோசித்து மனஅழுத்தத்தை நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம்.

எனவே, தேவையற்ற காரியத்தை சிந்திக்காமல். உண்மையுள்ளவை, ஒழுக்கமுள்ளவை, நீதியுள்ளவை, கற்புள்ளவை, அன்புள்ளவை, நற்கீர்த்தி எதுவோ, புகழ் எதுவோ, புண்ணியம் எதுவோ அவைகளையே சிந்தித்து வாழ்வோம். (பிலி4:8) ஆமென்.

 


Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God