×
விசுவாசமும் செயல்பாடும் | Faith and Action | Rev. B. Samuel |14-Apr-2024 | Praise AG Church | Kolathur

• நம்முடைய எதிர்மறையான சூழ்நிலையில் நாம் எப்படி இருக்கிறோம்.

• தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறவர்.

• எல்லா மேன்மைகளையும் அனுபவிக்க தேவன் திட்டம் வைத்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் தான் இன்றைக்கு செய்தி பார்க்கபோகிறோம்.

சங்கீதம் 23:1

 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்

உண்மையாகவே தேவன் நம்முடைய வாழ்க்கையில் மேய்ப்பராய் இருக்கிறார் என்பதை உணர்வோடு நம்பும் நம்பிக்கை இருக்கிறதா.

 இதன் படி நம்பிக்கை இருக்குமானால் எந்த மனிதனுடைய வார்த்தையும் எந்த விதத்திலும் நம்மை பாதிக்காது அப்படியானால் நமக்குள் ஒரு பாதிப்பு இருக்குமானால் நாம் இன்னும் தேவனுடைய வார்த்தையை நம்ப வில்லை.

 

சங்கீதம் 34:10 - கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.

நீண்ட நாட்களுக்கு ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் இன்னும் எனக்கு நன்மை உண்டாகவில்லையே என்றால் கர்த்தரை தேடுவதில் குறைவோடு இருக்கிறோம்.

மல் 1: 5 – நான் பிதாவானால் என் கனம் எங்கே.

புதிய ஏற்பாட்டின் படி எல்லாரும் தேவனுடைய வேலைக்காரர் 

நம்முடைய வாழ்க்கையில் நன்மை குறைவுபட்டிருக்குமானால் தேவனை தேடுவதில் குறைவு பட்டிருக்கிறோம் இதை சீர்படுத்தி கொள்வோம்.

 

லூக்கா 15:17 - இளைய குமாரன்

கூலி காரர்களுக்கு கூட பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது அப்பாவோடு இருக்கிற…

அவரோடு இருந்தால் ஒரு நிறைவான வாழ்க்கை. நிறைவு  என்பது நம்முடைய மனதில் இருக்கிறது. பணம், செல்வம் இதினால் உண்டாவது இல்லை நிறைவு நம்முடைய ஆசீர்வாதத்திற்கும் தேவனுடைய நன்மைக்கும் தொடர்பு இருக்கிறது

தகப்பனோடு இருந்தால் அந்தந்த காலகட்டத்தில் நமக்கு செய்ய வேண்டிய நன்மைகளை செய்வார்.

நம்முடைய வாழ்க்கையில் பல கடினமான சூழ்நிலைகளினிமித்தம் சிக்கல்களை எடுத்து போட போராடாமல் தேவனோடு உள்ள உறவை சரிபடுத்தினாலே போதும்

(ஐ நாள 29:11,12) – எவரையும் பலப்படுத்தவும், எவரையும் மேன்மைபடுத்தவும் அவராலே ஆகும்.

ஐஸ்வரியமும் கனமும் அவராலே வருகிறது…

என்னை ஆசீர்வதிக்க உம்மாலே மட்டுமே முடியும் என்று நம்புங்கள்.

 

சங்கீதம் 128:1,2 – கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடக்கிறவன்..

இதை செய்தால் தான் நம்முடைய கைகளின் பிரயாசத்தை சாப்பிட முடியும். எனக்கு இந்த பாக்கியத்தையும் நன்மையும் தாரும். 

உபா 8:17,18 – என் சாமர்த்தியம், என் பெலன், என் கையின் பெலன் என்று நாம் சொல்வோமானால் நம்மை போல அறிவில்லாதவர்கள் யாரும் இல்லை.

- ஐஸ்வரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனை தருகிறவர் கர்த்தர் அவரை நம்புங்கள்.

லூக்கா 12: 15-21 – என் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ உம்மிடத்தில் ஐஸ்வரியவானாக இருக்க வேண்டும் என்று நம்புங்கள். 

ஐஐஐ யோ 2, எபி 13:5,6, பிலி 4:13 – தேவனை நம்புங்கள்

லூக்க 5:5 – எப்படி நம்ப வேண்டும்?

ஐயரே இரா முழுவதும் பிரயாசப்பட்டோம். 

கலிலேயா கடலில் பகல் நேரத்தில் அல்ல இரவு நேரத்தின் மட்டும் தான் மீன் பிடிக்க முடியும் ஆனால் இந்த அனுபவமே இல்லாத இயேசு சொல்லும் போது ஆகிலும் உம்முடைய வார்த்தையின் படி வலையை போடுகிறேன். இதை செய்த போது வலை கிழியதக்கதாக மீன் பிடித்தார்கள். இது தான் தேவனை நம்புகிற நம்பிக்கை.

ஆபிரகாம், ஈசாக்கு பலி – கர்த்தர் பார்த்து கொள்வார் இந்த நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். ஆழமான நம்பிக்கை இருக்க வேண்டும். 

லூக்கா 9:16 ஐந்து அப்பம் இரண்டு மீன்.

ஐம்பது ஐம்பது பேராக உட்கார வையுங்கள் என்கிறார் இது தான் விசுவாசம் இது ஒரு விசுவாச செயல்பாடு.

உங்கள் வருமானம் குறைவு தான். எல்லாருக்கும் வருமானம் தான் ஆதாரம் உங்களுக்கு எனக்கும் தேவன் தான் ஆதாரம்.

மாதம் ஆரம்பிக்கும் முன்னே உங்கள் அடிப்படை தேவைக்காய் பட்ஜட் போடுங்கள் (உங்கள் வருமானம் குறைவாக இருக்கும்) மாதம் முடிவிற்குள் தேவன் ஆச்சர்யமாய் தேவைகளை சந்திப்பார்.

தேவையை எழுதி வைத்து குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களும் ஜெபியுங்கள்.

Related Post

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God