×

Youtube Link

https://www.youtube.com/watch?v=1cqLM4AC4y0


வேதபகுதி: சங்கீதம் 25:1-8

நம்முடைய வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே நாம் நிற்கிறோம், அடுத்த நிலைக்கு நம்மால் முன்னேறி செல்ல முடியவில்லை என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    தாவீதின் வாழ்விலும் இதே சூழ்நிலை ஏற்பட்டபொழுது அவர் நினைத்த ஒரு காரியம். சங்கீதம்25:7, இளவயதின் பாவம். எனவே இளவயதின் பாவங்களையும், மீறுதல்களையும் நினையாதிரும் என்று ஜெபிக்கிறான். தேவன் ஏற்படுத்திய சட்டங்களை மீறுவது பாவம் ஆகும். பாவம் நம்மில் குற்ற மனசாட்சியை ஏற்படுத்தும். குற்றமனசாட்சிநான் இந்த தவறு செய்து விட்டேன் என்கிற உணர்வு நமக்கு ஏற்படும். அவமானம்- நாம் செய்த தவறு மற்றவர்களுக்கு தெரியும்போது ஏற்படுகிற உணர்வு அவமானம் ஆகும். (குற்ற மனசாட்சியும் அவமான உணர்வும் அநேகரை தற்கொலைக்கு நேராய் நடத்துகிறது. நிம்மதியாய் இருக்க விடாது.

    நீதி 5:11,12,13,14 வாழ்க்கையில் முடிவிலே குற்ற மனசாட்சியை உணர்வது பிரயோஜனமில்லை.

நம்முடைய இளவயதின் பாவங்களை, அறிக்கை செய்யப்படாத பாவங்களை தேவ சமூகத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

  இளவயதின் பாவம் என்பது என்ன?

     பாவம் என்று, தவறு என்று நமக்கு எந்த வயதில் தெரிந்ததோ அந்த வயதிலிருந்து செய்யும் பாவமே இளவயதின் பாவம் ஆகும். நீதிமொழிகள் 20:27, நம்முடைய ஆவி நம் உள்ளத்தில் இருப்பதை ஆராய்ந்து பார்க்கும்.

 இளவயதின் பாவங்கள்:

  இருதயத்தில் உண்டாகிற இளவயதின் பாவங்கள்:  பெருமை

       (நீதி 16:18), சுயநலம் சார்ந்த நோக்கம், விரோதம், பொறாமை, கசப்பு, மன்னியாமலிருப்பது.

சிந்தையில் இருக்கிற பாவம்: காம உணர்வு(மத் 5:28),  அதிகாரத்திற்கு கீழ்படியாமை, தேவனுடைய வார்த்தையின் மீதும் தேவன் மீதும் நம்பிக்கையில்லாமல் இருப்பது (சந்தேகம், அவிசுவாசம்).

சரீரத்தின் செய்கையினால் ஏற்படுகின்ற பாவங்கள்: தவறான பாலுணர்வு, போதைபழக்க வழக்கம், அதிக கோபப்பட்டு சண்டைப்போடுவது.

நாவின் பாவங்கள்: பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், பிறர் செய்யும் தவறை மறைத்தல், புரளி பேசுதல், அவமரியாதையாக பேசுவது, மற்ற குடும்பங்களை பிரிப்பது.

(சுபாவத்தில்)நடத்தையில் ஏற்படும் பாவங்கள்சோம்பேறித்தனம், நேரத்தை வீணாக்குதல், காலத்தை விரயமாக்குதல், வேலை மற்றும் படிப்பில் நேர்மை குறைவாக நடப்பது.

        இந்த 5 பாவங்களில் எது நமக்குள் இருந்தாலும் அது நமக்குள் குற்ற மனசாட்சியை ஏற்படுத்தும். அதனால் நம் வாழ்வின் அடுத்த நிலைக்கு நம்மால் முன்னேற முடியாது. எனவே நம்முடைய குற்ற மனசாட்சியிலிருந்து நாம் வெளிவர தேவனிடத்தில் உதவி செய்ய கேட்க வேண்டும்.

     எங்களுக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும் என ஜெபிக்க வேண்டும். அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தருவார். என் இளவயதின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினையாதிரும் என்று ஜெபிக்க வேண்டும்.

        சங்கீதம் 25:8ன் படி, கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்: ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். நாம் நடக்க வேண்டிய வழியை கருத்தாய் போதித்து நடத்துகிறவர் நம் தேவன்.

ஆமென்.


Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God